பதிவு செய்த நாள்
29
செப்
2018
12:09
பேரூர்: பேரூர் கோவிலில் ஆய்வுபேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழ்நாடு கோவில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவினர் நேற்று (செப்., 28ல்)ஆய்வு செய்தனர்.
15 பேர் கொண்ட இக்குழுவினர், கோவிலில் உள்ள பாதுகாப்பு, சிலைகள் பாதுகாப்பு, பக்தர்கள் பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து, நேரில் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், ஆய்வறிக்கை தயார் செய்தனர்.
ஆய்வின்போது, பேரூர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மற்றும் போலீசார் உடனி ருந்தனர். லாரி மோதி குதிரை உயிரிழப்புசெல்வபுரம் - மாதம்பட்டி வரையிலான சிறுவாணி சாலையில், 15 குதிரைகள் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து கொண்டிருக்கின்றன. வாகனங்கள் மீது மோதி விபத்தும் ஏற்படுகின்றன.
நேற்று (செப்., 28ல்), பச்சாபாளையம் அருகே, சாலையில் சுற்றிக்கொண்டிருந்த குதிரை மீது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. படுகாயம் அடைந்த குதிரை உயிரிழந்தது. பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர், குதிரையின் உடலை அப்புறப்படுத்தினர்.
தூய்மை விழிப்புணர்வுதமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில், கடந்த, 16 முதல் 30 வரை அனைத்து மாவட்டங்களிலும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதிகளில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இம்முகாமில், தூய்மை குறித்து விழிப்புணர்வு பேரணி, கோவில் பகுதிகளில், தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா அலுவலர் ராஜன், உதவி அலுவலர் சதீஷ்குமார், உதவி திட்ட அலுவலர் வாணி மற்றும் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.