Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 33. அணுமயலிங்கம்
அணுமயலிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2018
01:10

"ஓம் நமச்சிவாய வா அழ்க இது பஞ்சாட்ஷரம் எனப்படும். இது வேதத்தின் மத்தியிலுள்ளது. ருக், யஜர், சாமம் என்ற மூன்று வேதத்தின் மத்தியிலுள்ளது யஜூர் வேதமாகும். இவ்வேதம் நூற்றொரு சாகைகளாக விரிந்து கிடக்கின்றது. இவற்றின் நடுச்சாகை ஐம்பத்தொன்றின் சாகை ஸ்ரீ போதாயன சாகை. இஃது ஏழு காண்டங்களாக அமைந்தது. இதன் மத்தியில் 4வது காண்டம் ""சதருத்ரீயம் இதன் மத்தியிலுள்ள காண்டமே ஐந்தாவது பிர்ஸ்னம். அதில் ""நம : ஸோமாயச ருத்ராயச என்றும் அனுவாகத்தின் இதயம் போன்ற உயிர்ப் பகுதியாக "நம : சிவாய என்னும் மந்திரம் பிரகாசிக்கிறது.

யாவற்று வேதங்களின் மெய்ப்பொருளெனவும், சர்வ வேதாந்த சாரமாயுள்ளதோர் மந்திரமாகும். ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமானார் அருளிய திராவிட சூக்தியில் "வேதநான்கினு  மெய்ப்பொருளாவது நாத நாம நமச்சிவாயவே என்றும், ""செந்தழலோம்பிய செம்மை வேதியர்க்கந்தியுண் மந்திரமஞ்செழுத்துமே என்றும் விளக்கினார். சிவத்துக்குப் பிரியமானவர்தாம், சிவனடியார்களாம். சிவத் தொண்டாற்றிச் சிவமாய் விளங்கிய அடியார் அனைவரும் எவ்வெவ்வடிவில் இறையை வணங்கினர் என்பதைப் பார்ப்போமே! உலக உயிர்களனைத்தும் சிறப்பு உய்வு பெற்று பிறவியில் நற்பேறு பெற முழுமுதற்பொருளாய் பரம்பொருள் "சிவம் கொண்ட வடிவமே லிங்கம் என்ற வடிவமாகும்.

படைப்பு காலத்தில் உலக உயிர்கள் யாவும் எவ்விதம் தோன்றியதோ, அதேபோல் லயம் என்ற ஒடுக்க காலத்தில் அதனதன் ஒடுக்கம் "லிம் என்ற தத்துவ மூலத்தாற் குறிப்பிடப்படுகிறது. அதுபோல் படைப்பு சிருஷ்டி எனப்படும் உயிர்த்தோற்றம் "கம் என்ற தத்துவ மூலத்தாற் குறிப்பிடப்படுகிறது. இதன்படி துவக்கம், ஒடுக்கம் இரண்டு தத்துவங்களும் "லிங்கம் என்று பொருள்படுகிறது. இத்தொழிலிலின் காரணனான "பராசிவம் காரணப்பொருள் வடிவமான லிங்கமாய் தோன்று சின்னமாகிறார். சிவ வடிவே லிங்கமாகிறது. அவ்வடிவின் தோற்ற விளக்கமே உரு, அரு, அருஉரு என மூன்று ரூபங்களாகின்றன. ஆகமங்கள் இதன் முறையே தத்துவம் - மூர்த்தி - பிரபாவம் என குறிப்பிடுகின்றன.

உரு : சகளத்திருமேனி என்று குறிக்கப்படுவதாகும். தலை, உடல், கை, கால்கள் என அனைத்து அவயவங்களால் அமைந்த மகேஸ்வரனின் வடிவங்கள் ""உரு எனப்படுகிறது.

அரு : நிட்களத்திருமேனி என்று குறிப்பிடப்படுவதாகும். உடல் உறுப்புகள் இன்றி நாம் காணும் லிங்கம் ஆவுடை கலப்பு தோற்றத்திலிருப்பதேயாகும். காண்பதற்கு லிங்க வடிவாயும், அவ்வடிவின் காணாதிருக்கும் அருவமாய் தலை, உடல், கைகால்கள், இன்றி மறைத்து அவை உள்ளுருவாய் அமைந்திருப்பதே "அரு என்ற இறைவடிவாகும். இவ்வடிவத்தை சிவம் சக்தி விந்து நாதம் என்ற நான்கும் ஒருசேரவிருப்பதோடு, மூன்று பாகங்களாய் அடிப்படை இருப்பதுமாகும். ஆகமத்தில் கூறுகிறபடி லிங்கத்தின் மேல்பாகம் ""சிவபாகம் என்றும், மத்யபாகம் "ஆவுடை என சக்திபாகமாகவும், கீழ்பாகம், பிரம்ம பாகம் எனப்படும் "பிருத்யுவி என்ற நிலத்தலைவன் பிரம்மனை உணர்த்துவதுமாகும்.

மூலதோ பிரம்ம ரூபாய,
மத்யதோ விஷ்ணு ரூபிணே,
அக்ரதோ சிவரூபாய,
விருஷ ராஜாயதே நம :                    

மந்திரம்
சிவலிங்க உரு மூன்று தனித்தனி பாகங்களாய் உருவாக்கி ஒன்று சேர்க்கப்படுவதாகும்.

1. உருளை நீள் உயரத்தின் மேல் லிங்கம் சிவபாகமெனவும் எண்பட்டை நடுபாகம் விஷ்ணு பாகம் எனவும், கீழ்சதுரபாகம் அடிபாகம் பிரம்மபாகமெனவும்.
2. சக்தி ஆவுடை என்ற வட்டமான பாகம் லிங்க பாகத்தில் கோர்த்தும்
3. பாதாளம் என்ற பிரம்மபாகம் பீடபாகம் கீழ்ச் சதுரத்தில் கோர்த்தும் இவ்விதம் 3 பாகங்களும் ஒரு சேரக் காண்பதே சிவலிங்கமாகும்.

அருஉரு: சகள நிட்களம்: அரு என்ற உருவமின்மையும், உரு என்ற வடிவமும் இணைந்த ரூபம் சகள நிட்கள ரூபமாகும். இவ்விருதத்துவ லிங்கத்தை முகலிங்கம், நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு, ஆட்யம், அநாட்யம் கரேட்யம், சர்வசம் என வகைப்படுத்தப்படுகிறது. 1000 ஆயிரம் முகங்கள் சிவபாகத்தில் எந்த வடிவும் இல்லாதது ஆட்யம் எனவும், 108 முகங்கள் செங்குத்தாக உடையது கரேட்யம் எனவும். சிவபாகத்தில் எந்த வடிவும் இல்லாதது அநாட்யம் எனவும், சிவபாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து சிவமுகம் பொறிக்கப்பட்டது சர்வசம் எனப்படும் சிவலிங்கங்களாகும்.

அணு, பரமாணு விஞ்ஞான மயத் தோற்றம் :

அணுவின் அணுவின் ஆதிபிரானை
அணுவின் அணுவினை ஆயிரங்கூறிட்டு
அணுவின் அணுவினை அணுக வல்லார்கட்கு,
அணுவின் அணுவினை அணுகலுமாமே.

திருமந்திரம் - திருமூலர்

"அணு என்பதும், அதன் இயக்கங்களும், சக்திகளும் இன்றைய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் முன்னோர்கள், பண்டைய ரிஷிகளும், அருளாளர்களும், இதனை மிகத் துல்லிமயமாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய்ஞான அறிவாற் கண்டுபிடித்து அதனோடு நம்மையும், இறைவனையும் இணைத்துக் கண்ட உண்மைகள் ஆன்மீக அடிப்படைப் பாடமாகும். அணுவும், பரமாணுவும், எனச்சொல்லி, அசைவற்றிருந்த உலகினை பிரபஞ்சத்தை பிரபஞ்சநாயகன் தான் நினைத்தமாத்திரத்தில் அசைவற்றிருந்த அணுக்கூறுகள் ஒன்றோடு ஒன்றாய்க் கலந்து அணுச்சலன அதிர்வுகளால், சப்தமெழுந்து, ஒளியுண்டாகி அனைத்துமாகி "சிருஷ்டி என்ற படைப்புத் துவங்கிய விதத்தையும், அப்படைப்பு ஒடுக்கத்திலிருந்து மீண்டது என்பதையும் இத்தோன்றலும் தோன்றியவை, ஒடுங்குவதும், ஒவ்வொரு அணுவும் தோன்றியவாறே தோன்றுவதற்கு முன்பிருந்த ஒடுக்க நிலையில் ஒடுங்குவதும், ஒரு நியதி என்பதைக் கண்டு சொன்னார்கள். மேலும் பிரிக்க முடியாத இறுதித்துகளும் தனக்கென இரு உருவங்களைக் கொண்டதாக concave convex  குழியும், குவியும், என இருப்பதோடு, அதனுள் சக்தியும், சலனமும் என்ற உட்கூறுகளுக்கும் இடையில் ஒரு வெளியும், ஒளியும், இயக்கப்பண்பு மாறாத, அதன் ஒடுக்ககாலம் வரை, அதன் சலனம் நிற்காமலும், இருப்பதைக் கண்டறிந்து கூறியிருப்பதை இன்றைய விஞ்ஞானம் ""வோர்க் தியரி என அதை ஒப்புக் கொண்டிருப்பது உண்மைக்கு உரைகல்லாகும்.

குவாண்டம் தியரி, ஸ்டிரிங்தியரி என்றெல்லாம் பலப்பல ஆராய்ச்சிகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் தோன்றியிருக்க முடியாது. எனவே ஏதோ ஒன்று முதலில் இருந்திருக்கிறது என்றவரை ஒப்புக்கொண்ட இன்றைய விஞ்ஞானம், ஏதோ அந்த ஒரு "இருப்பே இறைவன் என்பதை விரைவில் ஒப்புக் கொள்ளும் காலம் வரும். அணுவின் வடிவமே லிங்கம் ஆகும். அணுக்கரு மின் ஆற்றல் கொண்டதாகும். புரோட்டான் என்ற அணுவின் மையக்கருவை நேர்மின் அணுத்துகள், எலக்ட்ரான் என்ற மின் அணுத்துகள் வலமாக நீள் வட்டப்பாதையிலும், நியூட்ரான் என்ற மின்அற்ற சிற்றணுத்துகள், இடமாக எலக்டரான் எதிர்பாதையிலும், புரோட்டானைச் சுற்றிவந்த வண்ணமாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு அணுவும் பிரணவ வடிவமாக உள்ளதென்பர். புரோட்டான் அகாரமாயும், எலக்ட்ரான் உகாரமாகவும், நியூட்ரான் மகாரமாகவும் இருக்கிறது. அகரமே இறைவன், உகரம் உயிர் சக்தி, மகரம் இருசக்திகள் இணையும் மாயா சக்தியாகவும், இருக்கின்றன. மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்றின் பாங்காய் சிவலிங்கம் சேர்ந்திருப்பதால் அணுவைப் பிரணவ சக்தியாகப் பார்க்கப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை முறையே தொம்பதம், தற்பதம், அசிபதம், எனவாகிறது.

தொம்பதம்: ஆணவம், கன்மம், மாயை, நீங்கப்பெற்ற பரிசுத்த ஆன்மா. தற்பதம்: ஜீவனுக்குள் பரந்து நிற்கின்ற அருட்சக்தி,

அசிபதம்: மூம்மலம் நீங்கிய சுத்த ஆன்மாவாகவும், ஜீவனுக்குள் தங்கியுள்ளது. பரவி வியாபித்துள்ள அருட்சக்தி கலக்குமிடமாகிறது. இம்மூன்று வேத வாக்கியப்பதங்கள் பிரணவத்தின் அணுபதமாகும்.

பிரபஞ்ச தோற்றமாய் விளங்கும் அனைத்துப் பொருட்களும் இவ்வித அணுக்கூட்டங்களின் மாறுபட்ட குணங்களுக்குத் தக்கவாறே பொருட்களும் தன்மையும் மாறுகிறது. எந்த ஒரு தனிமங்களும், அதன் தோற்றப் பரிமாணம், அடர்த்தி, மற்றும் எடை வித்தியாசம், ரசாயன குணத் தன்மைகள், இவைகள் யாவும் அணுக்கூட்டங்களின் வித்தியாசங்களுக்கு ஏற்ப அமைகின்றன. உதாரணமாக, நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எடை கூடுதல் குறைவு ஆகும். புரோட்டான்களின் எண்ணிக்கை மாறுபடும்போது தனிமங்களின் இரசாயன குணங்கள் மாறுபடும். இம்மாற்றத்தத்துவத்தின் மையப்படுத்தப்பட்ட அலகே, அணு எண்ணும்-எடையும் என விஞ்ஞானம் கூறுகிறது.

முன்பே சொன்னபடி, ஒவ்வொரு அணுவினுள் நடைபெறும் அணுச்சலனம் என்பது இறையின் திருநடனக்கூத்து. இவ்வடிப்படையில் ஒரு உலோகத்திலிருந்து மற்றொரு உலோகத்தை உருவாக்க, மாற்ற, மறைக்க இயலும் என்பதையும், உருக்குலைந்த எதையும் உருவாக்கச் செய்தும் உடம்பு உட்பட அணுமாற்றங்களைச் செய்யும் வழியறிந்துள்ளனர். மனக்காந்த அலைகளை உருவாக்கி அருட்காந்த அலைகளாக்கி, அணுமின் மாற்றங்களை உமிழும் சக்திமிக்க வல்லவர்களே ஞானிகள், அஞ் ஞானிகளுக்கு அச்சக்தியை அளிக்கவல்ல சுயம்பு லிங்கங்கள், ஜோதிர்லிங்கள் 68 என வீர ஆகமம் கூறுகிறது. அத்தகைய லிங்கங்களின் முதன்மையானதும் உலகில் தோன்றிய யாவற்றுலிங்கங்களுக்கும் முன் தோன்றிய லிங்கமே சுயம்பு நம் சோமசுந்தரர் என விளங்கி, அன்னை பராசக்தியையும், அனைத்துலகினரையும், சொக்க வைத்த சொக்கலிங்கம் ஆகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar