பதிவு செய்த நாள்
04
அக்
2018
02:10
(திருமலை மன்னரிடமிருந்து ஓதுவார்கள் பெற்ற செப்புப் பட்டயம்)
மேற்கண்ட செப்புப் பட்டயத்தில் காணப்படும் விஷயங்கள்
ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா மண்டெலேசுரன் அரியதழவிபாடன பாட்சசைக்குத் தப்பு வராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொடாதான் பாண்டி மண்டலத் தாபனாசாரியன், சோழ மண்டல பிரதிபாணாசாரியன், தொண்டமண்டலப்பிரதாபன், ராசாதிராசன் ராசபரமெசுரன் ராச மார்த்தாண்டன் ராச கெம்பீரன் ராசகுல திலகன் ராசசவுத்தண்டன் ராசகுல செகரன் வீரப்பிரதாபன் இழமுங் கொங்கும் யாள(ழ்)ப்பாணமும் யெம் மண்டலமுந் திறை கொண்டருளிய கெசபதி அசுபதி நாபதி நவù(ú)காடி நாராயணன் ù(ú)யவல் செய்ய விசய நகர்ப்பட்டணத்தில் வீர சிங்காசனத்திலிருந்து கெச வேட்டை கண்டருளி ராச்சிய பரிபாலனம் பண்ணி அருளா நின்ற ஸ்ரீமன் கட்டாரிச் சாழுவரில் உத்துங்க ராயர், வீர நரசிங்க ராயர், பிரபுட திருமலை நாயக்கன் அய்யணிகாரு தேவமகாராயர் அல்லமாப்பிரபு தெவமகாராயர், சென்ன வசவ தேவ மகாராயர், மல்லிகாச்சுன மகாராயர், சதாசிவ தேவ மகாராயர், வீரவசந்த ராயர்,, கிருஷ்ணராயர் அச்சுத ராயர், ராமராயர், வெந்த்திமராயர், திருமலராயர், வெங்கடபதிராயர், சிக்காராயர் ராமதேவராயர், ஆணைக்குந்திராயர் சீரங்க ராயரிலிப் பிரிதிவி பாண்டி - மண்டல ராச்சிய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற விசுவநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், பெரியவீரப்ப நாயக்கர், குமார கிருட்டிணப்ப நாயக்கர், முத்து வீரப்ப நாயக்கர், கஸ்தூரி ரெங்கப்ப நாயக்கர், முத்து வீரப்ப நாயக்கர் திருமலை நா(ய்)யக்கனய்யன் அவர்கள் ராஜ்ய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற கலியுக சகார்த்தம் சு சூ சா எய் ங - 4673 சாலி வாகன சகார்த்தம் சா ரு சி ய சி 1544 செல்லா நின்ற வெகுதர்னிய அர்பசி மாதம் மீ உ ய ரு 15 தெதி உள்ளுடைய முதலியார் சிஷன் மதுரைத்தலத்து அலங்கார ஓதுவார் ஆனந்த ஓதுவார் கனகசபாபதி ஓதுவார் வீதிவிடங்க ஓதுவார் குமாரன் தாண்டவ மூர்த்தி ஒதுவார்க்கு காணியாட்சிப் பட்டயங்கொடுத்தபடி காணியாட்சியாவது செங்குளம் நஞ்சை நிலம் முப்பது காணிகளையும் புஞ்சை இருபத்திமுக்கால் விரைப்பாடும் மாவிடை மரவிடை சொரணாதாய முள்படக் காணியாட்சியாக விட்டுக்கொடுத்த படியினாலே சந்திராதித்தர் வரைக்கும் புத்திர பௌத்திர பரம்பரையாக ஆண்டனு பவிச்சிக் கொள்வாராகவும், இப்படிக்கு நடக்குமிடத்தில் இந்த செங்குளத்துக்கு விகிர்தம் பண்ணாமல் அனு கூலமாய் நடத்தி வச்சி வந்த பெயர்கள் வங்கிடி அபிவிரத்தியாய் சகல திக்கு விசயங்களும் உண்டாயிருப்பார் அலங்கார ஓதுவார் செங்குளம் வளந்தெரியிருக்ககடுத்த மலக்கலு ராமச்சந்திரனய்யனெழுத்து
தா. குருசாமி ஓதுவார் செய்தி
குறிப்பு : மேற்கண்ட நன்செய் புன்செய் உடைய செங்குளம் கிராமம் ஓதுவார் செங்குளம் என்றே வழங்கி வருகிறது. அவ்வூர் திருப்பூவனத்திலிருந்து 10 கல் தொலைவில் உள்ளது என் தந்தையார் காலம் வரை செங்குளம் கிராமத்திலிருந்து வருகின்ற வருமானத்தைக் கொண்டு மதுரைக் கோயிலில் திருமுறைத் தொண்டு செய்யப்பட்டது. தற்சமயம் 1950ம் ஆண்டு ஏற்பட்ட ஜமீன் இனாம் ஒழிப்பில் சேர்ந்து எங்கள் கையை விட்டுச் செங்குளம் கிராமம் அகன்றது. மேற்கண்ட பட்டயம் இன்றும் எங்கள் கையில் இருந்து வருகிறது என்பதும் அது கூறும் செய்தி. உண்மையே என்பதும் அறியற்பாலதாகும் வித்துவான். தா. குருசாமி ஓதுவார்
ஓதுவார் பட்டயம் : பட்டயத்தின் தொடக்கத்திற்கு முன்பு இறைவனின் திரிசூலக் குறி பொறிக்கப்பட்டுள்ளது. இனி பட்டயத்தின் வாசகங்கள் அப்படியே தரப்படுகின்றன. பட்டயத்தின் இடையில் தெலுங்கில் ""திருமலை நாயக்கர் அய்யணி காரு என்றும் கடைசியில் கிரந்த எழுத்துக்களும் காணப்படுகின்றன.