பதிவு செய்த நாள்
04
அக்
2018
02:10
ஒவ்வொரு பரமாணுவிற்குள்ளும் அணுச்சலனம் அணுக்கருவின் நித்ய நடனம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இறைவனின் திருநடனம் அதிர்வுகளின் காரணமாய் இப்பிரபஞ்சம் அணுக்களில் சலனமும், சப்தமுண்டாயிற்று என்பதை வேதம் கூறுகிறது. அதிர்வே, சப்தம் என்றும், சப்தத்தினால் சலனம் என்றும் சலனமும், சப்தமும், ஒளியுண்டாக்கிதென்றும், ஒளிவடிவே உயிர்வடிவுகளும், உற்பத்தியாக்கின வென்றும் கூறுகிறார்கள். ஒலியின் வேறுபாட்டுக்குத்தக்கபடி பரிமாணம் உண்டாயிற்று. அப்பரிமாணங்களின் முழு வடிவமே இறைவனிடமிருந்து வந்ததென்பதால் இறைவடிவென்றும், அந்த சப்தக் கலவையின் நுணுக்கங் களை அறிந்தவர்களே ரிஷிகளாவர். அப்படி அறிந்து கொண்டவைகளே வேதங்கள். இயற்கையின் ஒவ்வொரு படைப்பினுள்ளும் உள்ள ஒரு ஒலிக்கலவையே உயிரோட்டம் தரும் சக்தியென்பதை உலகுக்கு உணர்த்தினர்.
இயற்கையின் எல்லா ஒலி அலைகளின் இலக்கணங்களை அறிந்து அதைப்பிரதிபலிக்கும் 51 எழுத்துக்களின் வரிவடிவில் அதைப் புகுத்தினர். அவற்றுள் சிறந்த முதன்மைக் கலவை அ-உ-ம "ஓம் என்ற ஒலியும், அவ்வொலியே பிரபஞ்ச படைப்பின் ஒவ்வொரு அலையிலும் ஊடுருவி நிற்பதுமாகும். அந்த ஓம் சேர்த்து வேறொரு சக்திமிக்கதாய் ஒலிக்கலவைகாளல் மொத்தம் 24 எழுத்துக்களைக் கொண்ட ஒளிமிக்கதாய் ஒரு மந்திரத்தை விசுவாமித்ரர் மஹரிஷி அவர்கள் வெளிப்படுத்தினதே ""காயத்திரி என்ற மந்திரமாகும்.
அம்மந்திரமே ஒளியாகவும், ஒளியை வணங்கும் மந்திரமாகவும், மந்திரங்களில் சிறந்த தெனவும் தேவர்களாலும், ரிஷிகளாலும் போற்றப்பட்டது. இக் காயத்திரி மந்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமுன், இம்மந்திரத்தால் மனிதர்களுக்கு என்ன பயன்? இதை பெண்கள் கூறலாமா? எவர் எவர் இதைக் கூறலாம்? இம்மந்திரத்தை (இலக்கணம், உச்சரிப்பு, ஒலி) தத்துவப்படி எவரும் கூறலாமென்றும், கூறுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை எனவும் பெரியோர்கள் கூறியுள்ளனர்.
காயத்திரி மந்திரம்:
காயத்திரிதேவி என்ற தேவதையாகப் பரிமளிக்கிறாள். காயத்திரிதேவி, சந்தியாதேவி, பரப் பிரம்ம தேவதை, எனவும் பெயருள்ள தேவியாகிறாள். இம் மந்திர தேவதை-24 எழுத்துக்களின் மந்திரசக்திமிக்க கூட்டுசக்தியைத் தனி உடலில் பெற்றவள். இவள் 25 முகங்களும் மந்தாரை, கோரோசனை, மை, செம்பருத்தி, மற்றும் ஆகாயம் ஆகிய நிறங்களையுடையதாகும். இருதாமரை மலர்கள், சக்கரம், கதை, நூல், கபாலம், பாசம், அங்குசம், போன்றவைகளையும், அபய, வரதமுத்திரைகளையும், கொண்ட 10 கரங்களையும், "சந்தஸ் எனப்படும் 24 எழுத்து இலக்கண சொற்றொடர்களைக் கொண்ட மந்திரவடிவுடை தேவியாவாள். வேதமந்திரங்களின் 52 வகை சந்தஸ்களில் ஒன்றான காயத்திரி சந்தஸýம் ஒன்றாகும். 23 அக்ஷரங்களையுடைய நிச்ருத் காயத்திரி மந்திரம் என்றும் 24 அக்ஷரங்களை யுடைய ரிஷி காயத்திரி மந்திரம் என்றும் இருவிதமாக பெரியோர்கள் கூறுவதுமுண்டு.
வால்மீகி மஹரிஷி எழுதிய ராமாயணம் 24 ஸ்லோகங்களில் காயத்திரி மந்திரத்தின் 24 எழுத்துக்களின் ஒவ்வொரு 1000 ஸ்லோகங்களின் முதல் எழுத்தாகவுள்ளது என்பது ரிஷி தெளிவாக்கிய வாக்காகும்.
ஓம் பூர்பு வ ஸ் ஸவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோயோனூ ப்ரசோத யாத்:
ஓம் பூர்பு வ ஸ் ஸ வ :
ப ர்கோ தே வ ஸ்ய தீ ம ஹி
9 10 11 12 13 14 15 16
த த்ஸ வி து ர்வ ரே ண் யம்
1 2 3 4 5 6 7 8
தி யோ யோ ந: ப்ர சோ த யாத்
17 18 19 20 21 22 23 24
ய : எவர்
ந : நம்முடைய
திய : புத்தியை
ப்ரசோத்யாத் : தூண்டுகிறாரோ
தத் : அப்படிப்பட்ட
தே வஸ்ய : ஒளிமிக்கவரான
ஸவிது : உலகைப்படைத்தவருடைய
வரேண்யம் : மிகவும் உயர்ந்த தான
பர்க : அழகுள்ள ஒளியை தேஜஸை
தீமஹி : வணங்குகிறோம் – தியானிக்கிறோம்
திரிகால தேவதை (காயத்ரி)
அதிகாலை : சூரியன் உதிக்கும் காலை நேரம் - காயத்ரி.
நடுப்பகல் : "சவித்ரு நல்ல ஒளியுடன் - சாவித்திரி
மாலை : சூரியன் மறையும் காலம் - சரஸ்வதி.
இக்காயத்திரி மந்திரத்தைச் சொல்லும் நேரம்
திரிகாலசந்தி : இரவு முடிந்து இராப்பொழுது காலையில் ஒடுக்கமாகும் வேளை. சந்திக்கும் காலம்
காலை : நண்பகலில் ஒடுக்கமாகும் வேளை. சந்திக்கும் காலம்
நண்பகல் : மாலையில் ஒடுக்கமாகும் வேளை சந்திக்கும் காலம் இம் முக்காலங்களை திரி சந்தி என கூறுவார்கள்.
காயத்ரி மந்திரம் சொல்வதன் காரணம்
மனிதன் தன் கர்மாக்களை அனுபவிக்கும் காலங்களில், ஏற்படும் தேகம், என்ற காயம் ஏற்படுத்திக் கொள்ளும் பாவங்களை நீக்கி மன ஆற்றல் பெருவதற்காகவே!
எத்தனை முறை சொல்ல வேண்டும்
குறைந்தபட்சம் ஒருநாளைக்கு, ஒருவேளைக்கு, குறைந்த பட்சம் ஐந்து முறை அதிகபட்சம் 10, 108, 1008 இன்னும் இயன்றவரை அதிகம் சொல்வது நன்மை பயக்கும்.
எத்தனை வகை காயத்ரி மந்திரங்கள்
விநாயகர், முருகன், சிவன், இதர சிவாம்சங்கள், நவக்கோள், எண்திசை பாலகர்கள், அம்பிகை, துர்க்கை, விஷ்ணு, ருத்ரன், இவர்களை சொல்லி காயத்ரி மந்திரத்தின் பகுதிகளை சேர்த்து சொல்லுவதாகும். தேவதைக்குப் பின்னால், நடுவில், இறுதியில், வித்மஹே ........ தீமஹி ......... பிரசோதயாத் சரியாகச் சொல்ல வேதியர்கள், மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த மந்திரத்தின் உயர்வுகளையும், ஓதுகையில் ஏற்படும் நன்மைகளையும் ஆன்ம முன்னேற்றம் பற்றியும் முழுவதும் இங்கே குறிப்பிடும் அளவுக்கு அடியேன அறிந்தேன் இல்லை. நான்கு வேதங்களை நன்கு கற்ற பெரியோர்களை அணுகி அவர்கள் மூலம் அறிந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும்.