சிவகாசியில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி எதிர்த்து உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 11:10
சிவகாசி:சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதிக்கும் முடிவை எதிர்த்து, சிவகாசியில் அய்யப்பன் சங்கம் சார்பில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.சங்க தலைவர் தெய்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன்முன்னிலை வகித்தனர். சிவகாசி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பங்கேற்றவர்கள் தாங்கள் 50 வயதிற்கு பின்பே தர்மசாஸ்தாவை காண சபரிமலை செல்லு வோம் என உறுதி மொழி எடுத்தனர். சங்கத்தினர் கூறுகையில் , சபரிமலையில் அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அருள் புரிகிறார்.
சபரிமலைக்கு செல்ல 48 நாட்கள் விரதம் இருந்து 18ம் படி ஏறி தரிசனம் செய்வது மரபு. புனித விரதம் இருப்பது 10 வயதிருக்கு உட்பட்ட சிறுமியருக்கும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்க ளால் மட்டுமே சாத்தியம். இடைபட்ட வயதில் உள்ள பெண்கள் சுவாமியை தரிசிக்க அனுமதி இல்லை என்ற மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதை மீறி அனைத்து வயது பெண்களும் சபரிமலை வரலாம் என்று கோட்பாடு ஆகம விதியை கேள்விக்குரியதாக்கும் செயல். சபரிமலை மரபையும் புனிதத்தையும் காக்க வேண்டும் என்றனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய பிரார்த்தனை செய்தனர். பல்வேறு ஐயப்பன் சங்கத்தினர் பங்கேற்றனர். மாடசாமி ராஜா, குருநாதர், ராஜபாளையம்: ஆகமவிதிகள் ஒவ்வொரு மதத்திற்கு வெவ்வேறு வகையாகவும், கட்டுப்பாடுகளுடன் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசின் நடவடிக்கை மீது பொது மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அய்யப்ப பக்தர்கள் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகி உள்ளது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
சுவாதி, ராஜபாளையம்: நீதிமன்ற தீர்ப்பு மக்களின் நம்பிக்கையை புண்படுத்தி வருகிறது. இதை அனுமதித்தால் ஆகம விதிகள் கேள்விக்குறியாகும். 10 முதல் 50 வயதிற்குள் உள்ள பெண்களை நாங்கள் கோயிலுக்கு செல்ல மாட்டோம் என தெரியபடுத்துகிறோம்.
ஜெயச்சித்ரா, ராஜபாளையம்: தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள், பக்தர்களின் உணர்வு களோடு விளையாடுவதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் மத நம்பிக்கைக்கு மாறாக சபரிமலைக்கு செல்ல விருப்பம் இல்லை. ஜல்லிக்கட்டிற்கு மக்கள் காட்டிய வேகத்தை கண்டு பணிந்த நீதிமன்றம், இந்த தீர்ப்பினையும் மாற்றிடும் வரை எதிர்ப்புகளை பதிவு செய்வோம்.