பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
படுநெல்லி:சீனிவாசப்பெருமாள் கோவிலில், உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் (அக்., 6ல்) மாலை, சீனிவாசப்பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு, சறுக்கு மரம் ஏறுதல், உறியடி உற்சவம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.இரவு, 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சீனிவாசப்பெருமாள், வீதியுலா வந்தார்.