பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
திருநெல்வேலி :வண்ணார்பேட்டை பேருந்து விநாயகர் கோயிலில் 21வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் நேற்றுமுன்தினம் காலை திருவாதவூரர் சிவநெறி நற்பணி மன்றத்தலைவர் குமரகுருபரர் தலைமையில் திருவாசகம் முற்றோறுதல் நடந்தது. மாலையில் சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை அனுக்ஞை, சங்கல்பம், கும்பபூஜை, ஹோமம், சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் விமானம், மூலஸ்தானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோமதிநாயகம் குருக்கள் பூஜைகள் செய்தார். மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மில் உரிமையாளர் கே.வி.ராஜேந்திரன், சென்னை சில்க்ஸ் நிறுவன பணி மேலாளர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொறுப்பாளர் முருகன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.