Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தாமிரபரணி மகா புஷ்கரம் விழா கோலாகலம் திருச்சி அருகே காளி கோவிலில் அகோரிகள் நவராத்திரி வழிபாடு திருச்சி அருகே காளி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி 4ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
நவராத்திரி 4ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2018
11:10

நவராத்திரியின் நான்காம் நாளான நாளை, மஹாலட்சுமியை வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவின் சக்தி வைஷ்ணவிதேவி. சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம், கருடன்.வைஷ்ணவி இந்த வேத மயமான வாகனத்தில் வரும் போது, வேதம் வகுத்தபடி அந்த காலத்தில் வாழப் போகிறோம் என்று அர்த்தம். தீமைகளை அவளே ஏற்றுக் கொண்டு நம்மை கட்டி காக்க போகிறாள் என்று அர்த்தம்.

வைஷ்ணவி என்பதற்கும், மகாவிஷ்ணு என்பதற்கும் நேரிடையான அர்த்தம் கொண்டால், எல்லா இடங்களிலும் நீக்கமற தானும் பரவி இருப்பவள் என்று அர்த்தம்.மதுரை மீனாட்சி அம்மன், ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி, கொடுக்க ஆரம்பித்தால், குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான், நாம் பெற முடியும்.நான்காம் நாள் வழிபாடு முறை:அம்பாள்: வைஷ்ணவி; சங்கு - சக்கரம் வைத்திருப்பவள்; தீயவற்றை அழிப்பவள்.

வாகனம்: கருடன்சிறப்பு: மஹாவிஷ்ணுவின் அம்சம்லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் வைஷ்ணவியை வழிபட வேண்டும்நைவேத்தியம்: புளியோதரை, பானகம்மலர்கள்: அம்பிகைக்கு, கதிர் பச்சை மலர்களால், அதாவது மரிக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால், அர்ச்சனை செய்ய வேண்டும்தாம்பூலம் : 9 அல்லது 11 வகை கொடுக்கப்பட வேண்டும்.ராகம்: காம்போதிநான்காம் நாளான இன்று, அட்சதையால் படிக்கட்டு வடிவ கோலமிட, சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.

மதுரை மீனாட்சியம்மன்
நாளை கல் யானைக்கு கரும்பு கொடுத்தல் கோலத்தில் காட்சி தருகிறாள். மதுரை மன்னன் அபிஷேக பாண்டியனின் ஆணவத்தைப் போக்க எண்ணிய சிவன், அவன் நகர்வலம் போகும் வழியில் சித்தர் கோலத்தில் குறுக்கிட்டார். மன்னன் கோபமுடன், ‘‘நீர் யார்? என்ன வேண்டும்?’’ என்றான். ‘‘சித்து வித்தைகளில் கைதேர்ந்த எனக்கு உன்னிடம் பெற ஏதுமில்லை’’  என்றார் சித்தர். அவரை சோதிக்க எண்ணிய மன்னன் கரும்பு ஒன்றைக் கொடுத்து அருகில் இருந்த கல் யானைக்கு கொடுக்கச் சொன்னான். சித்தரும் இயல்பாக யானையிடம் கரும்பை நீட்ட அதுவும் துதிக்கை அசைத்தபடி தின்றது. வியப்பில் ஆழ்ந்த மன்னன், ‘‘அப்பனே... சொக்கநாதா... உம் மகிமை புரியாமல் சோதித்து விட்டேனே... மன்னியுங்கள்’’ எனக் கதறினான்.  

மனமிரங்கிய சித்தர் மன்னித்ததோடு, ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். ‘எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும்’  என்றான்.  ‘அருளினோம்’ எனச் சொல்லியபடி சித்தர் மறைந்தார். ஆணவம் நீங்கிய மன்னன் மதுரையில் நல்லாட்சி புரிந்தான். இக்கோலத்தை தரிசித்தால் புத்திர பாக்கியத்துடன் குறையில்லாத வாழ்வு அமையும்.
வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், கோதுமை பொங்கல், காராமணி சுண்டல்

பாட வேண்டிய பாடல்
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புய மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar