வில்லியனூர்:சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி யளித்ததற்கு எதிர்ப்பு தெரி வித்து, வில்லியனூரில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பேரணி நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் வில்லியனூர் கிளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று (அக்., 15ல்) பேரணி நடந்தது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் எதிரில் துவங்கிய பேரணிக்கு ஐயப்பா சேவா சங்க வில்லியனூர் கிளை துணைத் தலைவர் பச்சையப்பன், சேவா சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தனர்.ஐயப்பா சேவா சங்க கிளை தலைவர் ஏகாம்பரம் பேரணியை துவக்கி வைத்தார். வில்லியனூர் நான்கு மாட வீதிகள் வழியாக சென்ற பேரணியில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.