சிங்கம்புணரி சபரிமலைக்கு பெண்கள் அனுமதி எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2018 12:10
சிங்கம்புணரி:சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை எதிர்த்தும், சபரிமலை சம்பிரதாயங்களை காக்க வலியுறுத்தியும் அனைத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் சிங்கம்புணரியில் ஊர்வலம் நடந்தது.
குருசாமி வேதாசலம் துவக்கி வைத்தார். சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் துவங்கிய ஊர்வலம், காரைக்குடி சாலை, அருள்தரும் ஐயப்பன் கோயில், சித்தர் முத்துவடுக நாதர் கோயில் வழியாக சீரணி அரங்கம் அருகே ஐயப்பன் கோயிலை அடைந்தது.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் பேசினர். ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.ஐயப்பனை தரிசிக்க 50 வயது வரை காத்திருப்போம், என பெண்கள் கோசமிட்டனர்.
பத்து முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருமுடி கட்டமாட்டோம், என அனைத்து குருசாமிகளும் உறுதிமொழி எடுத்தனர். ஊர்வலத்தில் பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.