ஸ்ரீவில்லிபுத்தூர்:சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது.சங்க தலைவரான ஆடிட்டர் இளமாறன் தலைமை வகித்தார். விஸ்வ இந்து பரிஷத் மாநில நிர்வாகி சரவண கார்த்தி துவக்கி வைத்தார்.ஆண்டாள் கோயில் முன்பிருந்து துவங்கிய ஊர்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் ஆண்டாள் கோயில் வந்து நிறைவடைந்தது.300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சரண கோஷமிட்டபடி பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டைஅருப்புக்கோட்டையில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பாக, சபரிமலையின் ஆகமவிதியை காக்க வேண்டி பக்தர்கள் பங்கேற்ற சரணகோஷ ஊர்வலம் நடந்தது. ஆனந்த ஐயப்பன் கோயிலிருந்து துவங்கிய ஊர்வலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சென்று முடிவடைந்தது. மேள வாத்தியங்களுடன், சரண கோஷங்களுடன் ஐயப்பன், முருக பக்தர்கள் மற்றும் ஆதிபாரசக்தி மன்றத்தினரும் குடும்பத்தினருடன், கலந்து கொண்டனர்.