உணவை கடவுளாக கருத வேண்டும் என்பதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். ’அன்னம் பரபிரம்ம சொரூபம்’ என்பர். இதற்கு ’சோறே தெய்வம்’ என்பது பொருள். சாப்பாட்டு பிரியர்களைப் பார்த்து ’அவனுக்கென்ன! சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று கிண்டல் செய்வதுண்டு. சிவன் கோயிலில் நடக்கும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர் சொர்க்க வாழ்வு பெறுவார் என்பதையே இப்படி கூறினர்.