மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை. ஒன்று உணவு என்னும் அன்னம், மற்றொன்று பக்தி என்னும் அன்னம். உணவை மட்டும் சாப்பிட்டு, உலக விஷயங்களில் ஈடுபட்டால் வாழ்வு அர்த்தமற்றதாகி விடும். பக்தி என்னும் உணவால் எண்ணம் தூய்மை பெறும். மோட்சம் என்னும் வீடுபேறு கிடைக்கும்.