வளவனூர் பிரம்மா குமாரிகள்இலவச சிறப்பு தியான முகாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2018 12:10
விழுப்புரம்: வளவனூர் மேற்கு அக்ரஹாரம் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில், இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது.முகாமில், வளவனூர் தி.மு.க., நகர செயலர் ஜிவா, முருகா மருத்துவமனை நிர்வாகி சுந்தரமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முகாமில் வாழும் கலை, நேர்மறையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல், ஞான விளக்கம், பட விளக்கம் மற்றும் ராஜயோக தியான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வளவனூர் மற்றும் சுற்றுபகுதி பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.இங்கு தினந்தோறும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரையிலும் இலவசமாக தியான பயிற்சி அளிக்கப்படுகிறது என நிர்வாகி செல்வமுத்துகுமரன் கூறினார்.