பதிவு செய்த நாள்
25
அக்
2018
12:10
சேலம்: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள சிவன் கோவில்களில் நடந்த அன்னாபி?ஷகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த, 22 முதல், நிறை மணி விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (அக்., 24ல்), காசி விஸ்வநாதருக்கு, அன்னா பிஷேகம், பூஜை நடந்தது. சேலம், வேம்பரசர் விநாயகர் கோவிலில், கருமாரியம் மனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குட ஊர்வலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கு நடந்த அன்னா பிஷேகத்தையொட்டி, சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பாண்டுரங்கநாதர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் புறப்பட்டது. குதிரைபூட்டிய சாரட் வண்டியில், செவ்வை மாரி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, திரளான பெண்கள், பால்குடம் ஏந்தி வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது.
சாகம்பரி அலங்காரத்தில், அன்னபாவாடை சாத்துப்படி செய்து, பக்தர்களுக்கு அருள்பாலித் தார். மகா தீபாராதனை நடத்தி, பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர், 11ம் ஆண்டாக விழாவை நடத்தினர்.
அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர், ஓமலூர் காசிவிஸ்வநாதர், இடைப்பாடி நஞ்சுண்டே ஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஆத்தூர் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், சங்ககிரி சோமேஸ்வரர் உள்பட சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில் களில், அன்னாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.