சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள சத்திய கிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
மலைக்கு பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகம், பூஜை முடிந்து அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது.
திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில்களில் காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
அலங்காநல்லூர்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள சிவன் சன்னதியில் ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
உசிலம்பட்டி ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோயிலில் சிவலிங்கத் திற்கு அன்னாபிஷேகம் நடந்தது. விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டி மருதோதய ஈஸ்வரமுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.