பதிவு செய்த நாள்
25
அக்
2018
01:10
ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி, வராகியம்மன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
மங்களநாத சுவாமிக்கு ருத்ர ஜெபம், 21 மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு புனித நீரில் அபிஷேகம் நடந்தது. எள்ளுருண்டைகள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு, 101 படி அன்னம் சுவாமிக்கு சாற்றப்பட்டது. பின் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, பலகாரங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை திவான் பழனி வேல்பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஸ்கார் ஸ்ரீதர் செய்திருந்தனர்.
வராகியம்மன் கோயில்: இங்குள்ள வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. பின் அம்மனுக்கு அன்னம், காய் கனிகள், பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் நேர்த்திக் கடனாக மஞ்சள் அரைத்தும், தேங்காய் உடைத்து நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
*ராமநாதபுரம் சிவன் கோயில்: ராமநாதபுரம் சிவன் கோயில்களில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அன்னம், காய்கனிகள் சாற்றப்பட்டது. சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.