ராமேஸ்வரம் கோயிலில் யானைகள் தங்க கூடுதல் வசதிகளுடன் நந்தவனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2012 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானைகள் இயற்கையான சூழலில் தங்குவதற்காக நந்தவனத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியது: யானைகளின் உடலில் வியர்வைத்துளைகள் இல்லை. வியர்வை வெளியேற வழியில்லாத நிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, மழையில் நனைவதன் மூலமும், நீண்ட நேரம் நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதன் மூலமும்தான் உடல் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. மண் தரையில் நடந்தால் பாதங்களில் புண்கள் ஏற்படாது. யானைகளும் சுகாதாரமாக இருக்கும். இதனால் ராமேஸ்வரம் கோயில் வடக்கு நந்திவனத்தில் இரண்டு யானைகளும் மூழ்கி குளிக்கும் வகையில் பெரிய அளவில் நீச்சல்குளம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து வசதிகளுடன் இயற்கைச் சூழலில் நந்தவனம் மேம்படுத்தப்படும். ராமநாதசுவாமி கோயில் யானைகள் பவானி, ராமலெட்சுமி, இஷ்டம் போல உலா வரலாம், என்றார்.