திருவாடானை: ராமநாதபுரம் தொல்லியல் நிறுவனத்தினர் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மாணவர்கள் நேரில் சென்று அறிந்து கொள்ளும் வகையில் மரபுநடை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
நேற்று (அக்., 28ல்) திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கினைப்பாளர் நிவாஸ்சங்கர் தலைமை வகித்தார். தொல்லியல் துறை நிறுவன தலைவர் ராஜகுரு பேசியதாவது: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்லதம். தேவார பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் ஆடானை என்று குறிப்பிடபட்டுள்ளது.
நான்கு கல்வெட்டுகளில் இரண்டு பிற்கால பாண்டியர் காலத்தையும், இரண்டு சேதுபதி காலத்தையும் சேர்ந்தவை. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு நிலக் கொடை வழங்கியதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான திருமலையன் பூஜைக்காக ஒவ்வொரு கிராமமும் வரி கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
இந்த வரி கொடுக்காமல் இருக்க கைகூலி வாங்கியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்றார். ஆசிரியர் ரியாஷ்கான் நன்றி கூறினார்.