ஆங்கரை கல்யாண ராம பாகவதர் என்று காஞ்சி காமகோடி மடத்தில் அறியப்பட்ட நம் ஸ்வாமிகளைப் பற்றி மஹா பெரியவாளின் திருவார்த்தைகள்:
1. என் வாக்கைக் கேட்டு வேலையை விட்டுவிட்டு ப்ராம்மண தர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறார். ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்துகொண்டு, பகவத் அர்ப்பண புத்தியோடு ஜனங்கள் கொடுப்பதைக் கொண்டு ஜீவனம் நடத்துகிறார். பூ-ஸ்திதி கிடையாது’.
2. ‘ப்ராசீன சம்ப்ரதாயத்துடன் ராமாயண பாகவத ப்ரவசனம் செய்கிறார். அவர் குடும்பத்தை பகவான் காப்பாற்றவில்லையா?’
3. ‘ஒவ்வொரு பாகவத ஸப்தாஹமும் மலை போன்ற காரியம், அவருக்குத் தான் சிரமம், நமக்கெல்லாம் ஆனந்தம்’.
4. ‘பாராயணம் மதுரம் !! ப்ரவசனம் மதுர - தரம் !!’
5. ‘அவர் ஸ்ரீமத் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஞானம் வந்து விடும். அவரைப் பற்றி நானும் நீயும் கவலைப் படவேண்டாம். அவரை சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் மோக்ஷம் தான் !!’
7. ‘குந்தியைப் போல் ஆங்கரை பாகவதரின் தாயாரும் க்ருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருப்பதற்காக தனக்கு கஷ்டங்களே வரவேண்டும் என்று பகவானிடம் கேட்டுக் கொண்டிருப்பார்! அதனால் தான் இவரது குடும்பத்தில் இவ்வளவு ச்ரமம்!”
8. பாரத தேசத்திலேயே நான்கு ஐந்து பேர்கள் தான் ராமாயண பாகவதத்தை விலை பேசாமல் ப்ராம்மணர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறார்கள்! அதில் ஆங்கரை பாகவதரும் ஒருவர்!’