பதிவு செய்த நாள்
30
அக்
2018
12:10
கோவை:ராமாயண யாத்திரைக்கு, ரயில் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் கடந்த வாரம் மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு வழியாக ஷீரடிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், 428 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றனர். தொடர்ந்து, ராமாயண யாத்திரை சிறப்பு ரயில் நவ., 14ம் தேதி புறப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், ஈரோடு வழியாக ராமாயண காவியம் நிகழ்ந்த இடங்களான மகாராஷ்டிரா, அலகாபாத் மற்றும் நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரி என இறுதியில், ராமேஸ்வரம் சென்றடைகிறது.
விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணிலும், தீதீதீ.டிணூஞிtஞிtணிதணூடிண்ட்.ஞிணிட் எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.