பதிவு செய்த நாள்
30
அக்
2018
12:10
கோவை:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், வரும் நவ., 30 முதல் டிச., 2 வரை இளைஞர் முகாம் நடைபெறவுள்ளது.இது குறித்து, வித்யாலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ராமகிருஷ்ண மிஷன் சார்பில், சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களையும், உயர்ந்த பண்புகளையும் இளைஞர்களிடையே பரப்பும் விதமாக, ஆண்டுதோறும் இளைஞர் முகாம் நடத்தப்படுகிறது. இதில், பக்திபாடல்கள், தியானம், பஜனை, யோகா, சொற்பொழிவு, கேள்வி - பதில், கட்டுரை, கலந்துரையாடல், பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 18 - 30 வயதுக்குள் இருப்போர் பங்கேற்கலாம்.முகாமில் உணவு, தங்குமிடம் மற்றும் புத்தகங்கள் உட்பட, ஒருவருக்கு, 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்பும் இளைஞர்கள், கட்டணத்தை டி.டி., அல்லது மணி ஆர்டராக, கீச்ட்ச்டுணூடிண்டணச் Mடிண்ண்டிணிண திடிஞீதூச்டூச்தூச் என்ற பெயருக்கு எடுத்து, செயலர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன்பாளையம், வித்யாலய அஞ்சல், கோவை - 641020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.நேரில், இளைஞர் முகாம் அலுவலகத்தில், செலுத்தலாம். விண்ணப்பம் நவ., 20ம் தேதி வரை வழங்கப்படும். முதலில் விண்ணப்பிக்கும், 500 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.