Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீப மந்திரம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 5. மங்கள கவுரீ விரத பூஜை
சிராவண மங்களவாரம்
எழுத்தின் அளவு:
சிராவண மங்களவாரம்

பதிவு செய்த நாள்

31 அக்
2018
03:10

கதை

தரும புத்திரர் கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்  “கோவிந்தா நீ எனக்கு இதுவரை நிறைய புராணக் கதைகளை கூறியுள்ளாய். நமது சந்ததியினருக்கு நீண்ட ஆயுளை வழங்கக்கூடிய விரத கதையை சொல்லுமாறு வேண்டுகிறேன் ”

அதற்கு கிருஷ்ணர், “தருமபுத்திரா! நமது பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுளையும், பெண்களுக்கு தீர்க சவுமங்கல்யத்தையும் வழங்கக்கூடிய ஒரு விரத கதையை சொல்லுகிறேன் கேள் ”, என்று சொல்லத் தொடங்கினார்.

அந்நாளில் கர்னாடக தேசத்தில் பிரசித்திப் பெற்ற குந்தானிபுரம் என்கிற நகரத்தில் தர்மபாலன் என்கிற வணிக செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வெகு நாட்களாக குழந்தைச் செல்வம் இல்லை.

அந்த வேளையில் தினந்தோறும் விபூதி, ருத்திராக்ஷம் அணிந்து ஜடாமுடி தரித்த ஒரு துறவி இவரது இல்லம் வரை வந்து பிக்ஷை எதுவும் வாங்காமல் சென்று கொண்டிருந்தார். துறவியின் இந்த செயல் தர்மபாலரையும் அவரது மனைவியையும் மிகவும் சங்கடப்படுத்தியது. மனைவியின் வருத்தத்தை அறிந்த தர்மபாலர் அவளிடம் ஒரு யோஜனையைக் கூறினார் “அதாவது துறவி வீட்டு வாயிலுக்கு வரும் தருணத்தில் நீ அவரது கையில் ஒரு தங்க நாணயத்தை வைத்து விடு” என்றார். மறுநாள் தர்மபாலன் கூறியது போல் அவள் சில தங்க நாணயங்களை துறவியிடம் கொடுத்தாள். துறவி கோபமடைந்து, “உனக்கு குழந்தை இல்லாததால் இந்நாள் வரை உன்னிடம் பிக்ஷை பெறவில்லை. ஆனால் என்னை ஏமாற்றி தங்க நாணயங்களை அளித்ததால் இனிமேலும் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை ” என்று சபித்தார். அதிர்ச்சியடைந்த அவள் அறியாமையால் செய்த பிழைக்கு விமோசனம் கூறுமாறு வேண்டினாள். துறவி கருணையுடன் “மகளே! உன் கணவனை உடனே கறுப்பு ஆடை தரித்து கறுப்புக் குதிரையின் மேல் ஏறி, காட்டிற்கு செல்லச் சொல். குதிரை எந்த இடத்தில் சறுக்கி விழுகிறதோ, அந்த இடத்தை நன்கு சுற்றுமுற்றும் பார்க்கச் சொல். அங்கு நவரத்தினங்கள் இழைத்த தங்க மயமான கோயில் காணப்படும். அதை சுற்றி நீரோடை, நறுமணம் கமழும் புழ்பங்கள் நிறைந்த நந்தவனம், பக்ஷிகள், விலங்குகள் இருக்கும். அந்த கோயிலில் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பார்வதி தேவி குடிகொண்டிருப்பாள். அந்த தேவியை ஷோடஷோபசாரத்துடன் அர்ச்சித்தால் உன் சாபம் நிவர்த்தியாகும். “இதைக் கேட்டு மகிழ்ந்து துறவியை நமஸ்கரித்து எழுந்து பார்த்தபோது துறவி அங்கு காணப்படவில்லை. நடந்த அனைத்தையும் கணவனிடம் கூறினாள்.

தர்மபாலர், துறவி கூறியது போல் காட்டிற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் அடர்ந்த மரங்களையும் சிங்கம், புலி, காட்டெருமை போன்ற வன விலங்குகளையும், தாமரைகள் நிறைந்த தடாகத்தையும் கண்டார். தர்மபாலர் அந்த குளத்தில் நீராடி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மேற்கொண்டு செல்லும் வழியில் ஓரிடத்தில் குதிரை சறுக்கியது. துறவியின் சொல்படி அந்த இடத்தில் கோயிலைக் கண்டான். அது தங்கத்தினாலும், நவரத்தினங்களாலும் அமைக்கப்பட்டிருந்தது போல காட்சியளித்தது. தர்மபாலன் அந்த கோயிலுக்குள் பிரவேசித்தான். திட நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சந்தனம், அக்ஷதை, சுகந்த புஷ்பங்கள், தூப  தீபங்கள், பலவித பழங்கள், பட்சணங்கள், பால், தாம்பூலம் முதலியவைகளை சேகரித்துக் கொண்டு தேவிக்கு ஷோடஷோபசாரங்களுடன் பூஜித்தான். தர்மபாலனின் இந்த சிரத்தையான பூஜைக்கு மகிழ்ந்து அவன் முன் அம்பாள் காட்சியளித்து “வேண்டும் வரம் கேள் ” என்றாள். எனக்கு அளவற்ற செல்வம் இருந்தும் குழந்தை பாக்யம் இல்லை. எனது முன்னோர்கள் நற்கதி அடையவும் நாங்கள் மகிழும் வகையிலும் எங்களுக்கு குழந்தை பாக்யம் அருள வேண்டுகிறேன்” என்றான் தர்மபாலன்.

“தர்மபாலா குழந்தைகளால் உனக்கு எந்த விதமான சுகமும் கிடையாது. இருந்தாலும், (1) விதவையாகக் கூடிய பெண் குழந்தையோ அல்லது (2) அற்ப ஆயுளுடன் கூடிய அழகான ஆண் குழந்தையோ அல்லது (3) தீர்க்காயுளுடன் கூடிய குருட்டு ஆண் குழந்தையையோ, எது வேண்டுமோ, நீ கேட்டு பெற்றுக் கொள் ” என்று தேவி கூறினாள்.

“அற்ப ஆயுளுடன் கூடிய அழகான ஆண் குழந்தையை தர்மபாலன் தேர்ந்தெடுத்தான். தேவியானவள், தர்மபாலனை, அருகில் இருக்கும் பிள்ளையாரின் அனுமதியுடன், பக்கத்தில் உள்ள மா மரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தை பறித்து உன் மனைவியிடம் கொடுத்தால் உன் கோரிக்கை நிறைவேறும் ” என்று தேவி கூறினாள்.

அதன்படி அவன் பிள்ளையாரிடம் வேண்டி, மா மரத்தின் மேல் ஏறி அம்பாள் கூறியபடி ஒரு பழத்தை மட்டும் பறிக்காமல் ஆர்வ மிகுதியால் நிறைய பழங்களை பறித்து கீழே போட்டு விட்டு இறங்கி பார்த்தால் ஒன்றுதான் இருக்கவே மீண்டும் இதே போல் பலமுறை செய்தும் ஒன்றுதான் தரையில் இருப்பதைப் பார்த்தான். இதற்குள் பிள்ளையார் கோபமடைந்து “சொன்னதைக் கேட்காமல் ஆசை மிகுதியால் தெய்வீக பழங்களை வீணாக்கியதால் பதினாறு வயதில் உன் மகன் பாம்பு கடித்து இறப்பான்” என்று சபித்தார். அதிர்ச்சி அடைந்த தர்மபாலன், வினாயகரிடம் மன்னிப்பு கோரி, பழத்தை மனைவியிடம் கொடுத்தான். சிறிது மாதம் கழிந்த பின் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு “சிவன்” என்று பெயரிட்டனர். இக்குழந்தைக்கு ஆறாவது மாதம் அன்ன ப்ராசனமும், 3 வது வயதில் சவுலம், 8 வயதில் உபநயனமும் செய்வித்தனர். பிள்ளைக்கு 10 வயது ஆனவுடன் தாய் அவனுக்கு விவாஹம் செய்விக்க விரும்பினாள். அதற்கு தர்மபாலர் பையனை காசிக்கு யாத்திரை போய் வந்த பிறகு செய்விக்கலாம் என்று தன் மைத்துனரையும் துணைக்கு காசிக்கு அனுப்பிவைத்தார். செல்லும் வழியில் அனேக தான தர்மங்களை செய்துகொண்டும், கோயில்களை தரிசித்துக் கொண்டும் சென்றனர். பிறகு காசி நகரத்தை வந்தடைந்தனர். அங்கு கூட்டமான பெண்களின் மத்தியில் தங்கம் போன்று ஒளிவீசும் பெண்ணைக் கண்டான். அவளை அவள் தோழி சண்டையின் நடுவில் “நீ விதவையாக போவாய்” என்று திட்டினாள். தங்கம் போல் ஜொலிக்கும் “சுசிலை ” என்ற அந்த பெண் அதற்கு “என் தாயார் செய்யும் ‘மங்கள கவுரீ’ விரதத்தினால் எனக்கு விதவை கோலம் வராது. நான் சுமங்கலியாகதான் வாழ்வேன்” என்றாள். மங்களமான இந்த விரதத்தை பற்றியும் மஹிமையைப் பற்றியும் தெரியுமா? இந்த பூஜையில் காண்பிக்கும் தூபதீபங்களின் ஜுவாலை பட்டாலே நமக்கு நன்மை உண்டாகும். என் விவாஹத்திற்கும், என் கணவனின் தீர்க்காயுளுக்கும், என் தாய் செய்துவரும் “மங்கள கவுரீ விரதத்தை நான் அனுஷ்டிப்பேன். இந்த கங்கையில் வாழும் சிவபெருமான் முன் சபதம் செய்கிறேன்” என்றாள். இதைக் கேட்ட தர்மபாலனின் மகன் சிவனின் மாமா இவளின் தாயாரின் கையால் சிவனுக்கு அக்ஷதை கிடைத்தால் தீர்காயுள் உண்டாகும் என்ற நோக்கத்தோடு சுசீலையை பின்தொடர்ந்து அவள் வீட்டின் அருகிலேயே ஒரு மண்டபத்தில் தங்கினார்கள்.

இதே சமயத்தில் சுசீலையின் தந்தை ஹரி என்று பெயருடையவர், அருகில் இருக்கும் சிவன்கோயிலில் சுசீலையின் விவாஹத்திற்கு உத்திரவு வேண்டி அர்ச்சனை செய்தார். ஆனால் எந்த உத்திரவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் பார்வதிதேவியிடம் தாயே நீயாவது என் மகளுக்கு தகுந்த வரனை அருள வேண்டும் என்று வேண்டினார்கள். இதை கேட்டுக்கொண்டிருந்த சிவனின் மாமன் பார்வதி தேவியின் சிலைக்கு பின்னால் மறைந்துக்கொண்டு “தம்பதியர்களே! அயல் தேசத்திலிருந்து இந்த ஊருக்கு வந்திருக்கும் ‘சிவன்’ என்கிற வரனுக்கு சுசீலையை கொடுத்து விவாஹம் செய்விக்கவும்” என்று கூறினான். அதன்படி சுசீலையின் தந்தை ஹரி ஒரு சுப முகூர்த்தத்தில் விவாஹத்தை செய்விக்க சம்மதித்தார். அன்று இரவு சுசீலையின் கனவில் மங்கள கவுரீ அவள் தாயின் ரூபத்தில் தோன்றி “மகளே! உன் கணவனைத் தீண்ட ஒரு கரிய நாகம் வந்துக் கொண்டிருக்கிறது. உடன் நீ எழுந்து அதற்கு பால் வைத்து அருகில் ஒரு கும்பத்தை வைத்துவிடு. அது பாலைக் குடித்துவிட்டு கும்பத்திற்குள் புகுந்து விடும். அதன் வாயை துணியினால் கட்டிவிடு” என்று சொல்லி தேவி மறைந்து விட்டாள்.

அதேபோல் காசி விஸ்வநாதர் சிவனின் கனவில் தோன்றி, “நீ தங்கியிருக்கும் இடத்திற்கு எதிரில் உள்ள வீட்டிற்குச் சென்று, ‘மங்களகவுரீ’ விரத ப்ரஸாத பக்ஷணங்களை பிக்ஷை கேட்டுப்பெற்று, உண்பாயானால், உனக்கு தீர்க்க ஆயுளும் நல்ல மனைவியும் கிடைப்பாள்” என்றார். இதேபோல் சிவனது மாமாவின் கனவிலும் தோன்றிட, அவர் மிக சந்தோஷமடைந்தார்.

அச்சத்துடன் விழித்துக்கொண்ட சுசீலை வேகமாக வரும் கரிய நாகத்தைக் கண்டு தேவி கூறியபடி பாலையும் கும்பத்தையும் கொண்டுவந்து வைத்தாள். நாகம் கும்பத்துக்குள் சென்றவுடன் சுசீலை துணியால் கும்பத்தின் வாயைக் கட்டினாள்.

அதற்குள் சிவனும் விழித்துக் கொண்டு தனது பசிக்கு ஏதாவது ஆஹாரம் கேட்க, சுசீலை பட்சணங்களை ஒரு தங்க பாத்திரத்தில் கொடுத்தாள். சிவன் அதை உண்ட பின் தனது கையிலுள்ள மோதிரத்தை அந்த பாத்திரத்தில் போட்டுவிட்டு, சிவன் சென்றுவிட்டான். விடிந்தவுடன் சுசீலை நடந்த விபரத்தை தன் தாயிடம் சொன்னாள். வாயனத்திலிருந்த மோதிரத்தை தாய் எடுத்து சுசீலையிடம் கொடுத்தாள். இந்த மோதிரத்திற்கு உரியவனே மாப்பிள்ளை என்று தீர்மானித்தார்கள். பிறகு சுசீலையின் பெற்றோர் தன் மாப்பிள்ளையை தேடும் நோக்கத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வந்தனர். அதில் சுசீலை தன் கணவரின் மோதிரத்தை வைத்து பிராமணர்களின் பாதங்களை அலம்பி வந்தாள்.

இதற்கு நடுவில் சிவனும் அவள் மாமாவும் கங்கையில் நீராடி விஸ்வநாதனை தரிசித்து மஹான்களுக்கு நிறைய தானதர்மங்களை செய்து அவர்களிடமிருந்து “சிரஞ்சீவியாக இரு” என்னும் ஆசிகளை பெற்றுக் கொண்டு ஹரித்வார் வந்தனர். அங்கு மஹான்களை தரிசித்துக் கொண்டு மறுபடியும் காசி க்ஷேத்திரம் வந்தடைந்தனர். சிவனுக்கு இந்த சமயம் 16 வயது பூர்த்தியாக மாமன் கவலையுற்றார். அப்பொழுது சாக்ஷாத் சிவபெருமான் தோன்றி சிவனுக்கு மங்கள ஆசீர்வாதங்களை வழங்கினார். இதை அறிந்த மாமன் மகிழ்ந்து மங்கள ஸ்நானம் செய்துவிட்டு விஸ்வேஸ்வரனை தரிசித்தனர்.

அங்கு யாத்திரீகர்கள் ‘ஹரி ’ செய்யும் அன்னதானத்தை பற்றி விவரமாக கூற இருவரும் சுசீலையின் இல்லத்தை வந்தடைந்தனர். சுசீலை சிவனின் பாதத்தை அலம்ப வரும்போது இவனே என் கணவர் என்று கூறினாள்.

மகிழ்ச்சியடைந்த சுசீலையின் பெற்றோர் தன் மகளுடன் அனேக விதமான ஆடை ஆபரணங்கள் பசுக்கள் இவைகளை சிவனிடம் கொடுத்து மகிழ்ந்தனர்.

தர்மபாலன் இவை அனைத்தையும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். சிவனுக்கும் சுசீலைக்கும் விவாஹம் நடைபெற்றது. சிவனையும் சுசீலையும் தர்மபாலன் அழைத்து வந்தார். சுசீலையின் மூலம் மங்கள கவுரீயின் விரத மஹிமையை அறிந்து அவளின் மூலமாகவே விரதத்தை அவர்களது இல்லத்தில் அனுஷ்ட்டித்தான்.

“தர்மபுத்திரனே! இந்த விரதத்தை ஆவணி மாத செவ்வாய் கிழமையன்று அனுஷ்டிக்க வேண்டும். காலையில் மங்கள ஸ்நானம் செய்து மங்கள கவுரியை பிரதிஷ்டை செய்து ஷோடசோபசாரங்களுடன் தேவியை பூஜிக்க வேண்டும். பதினாறு தீபங்களை ஏற்றி அதை பதினாறு சுமங்கலிகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். பல்வேறு பக்ஷணங்கள் செய்து நிவேதித்து எல்லோருக்கும் பிரஸாதமாகக் கொடுக்க வேண்டும். அன்று உப்பில்லா ஆகாரமாக உண்ண வேண்டும் ” என்று கிருஷ்ணர் கூறி மங்களகவுரீ விரத பூஜை மஹிமையை முடித்துக் கொண்டார்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் தீர்க்க சவுமாங்கல்யத்துவம் ஏற்படும் என்பது நிச்சயம்.

மங்கள கவுரீ விரத பூஜை
(சிராவண மங்களவாரம்)

காலம்: திருமணம் ஆகிய பெண்மணிகள், சிராவண மாதத்தில் அதாவது ஆவணி மாதத்தில் வருகின்ற எல்லா செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த மங்கள கவுரீ விரதத்தை அனுஷ்டித்து மங்கள கவுரீ பூஜையைச் செய்யவும். இந்தப் பூஜையை திருமணம் நடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டும். முதலாம் ஆண்டு பிறந்த வீட்டிலும் (தாய் வீட்டிலும்) மற்ற நான்கு ஆண்டுகள் கணவன் இல்லத்திலும் அனுஷ்டிக்க வேண்டும். கீழே குறிப்பு 2ல் சொல்லப்பட்ட கலசத்திலோ அல்லது பெரிய தீபத்தை ஏற்றி வைத்து, அந்த புனிதமான தீபத்தில் ஸர்வமங்களா தேவியைப் பூஜிப்பது உத்தமம், மங்கள கவுரீ விரத கதையை கேட்கவோ, படிக்கவோ வேண்டும்.

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் (பக்கம் 6 மற்றும் பக்கம் 7ம் பக்கங்களை பார்க்கவும்.)

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

இதைத் தவிர பருத்திப் பஞ்சில் செய்த மாலை, ரூபாய் நாணயம், அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, கடலை, மூங்கில் தட்டு, கண் மை நெய், 16 தீபம் (அகல் விளக்கு), வெங்கல கலசம்.

2. ஒரு கலசத்தில் (வெங்கல கலசம் இருந்தால் உத்தமம்) அரிசி நிரப்பி, ஒரு மஞ்சள் கிழங்கு, ஒரு ரூபாய் நாணயம் போட்டு, ஒரு ரவிக்கை துணியை கலசத்தில் சார்த்தி, திருமாங்கல்ய சரடில் ஒரு மஞ்சளை கோர்த்து அதை கலசத்தின் கழுத்தில் வஸ்த்ரத்தின் மேல் கட்டி ஸ்ரீமங்கள கவுரியை ஆவாஹித்து அதில் பூஜை செய்ய வேண்டும். (முன்பக்கத்தில் உள்ள படத்தைப் பார்க்கவும்)

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், பாயஸம், பட்சண வகைகள், வெல்லம், கடலை, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் + கணபதி தியானம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீவிக்னேச் ’வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜையும் முன்னால் இந்த விக்னேச்’வர பூஜையை செய்ய வேண்டும். (பக்கம் 29பக்கம் முதல்  39 ம் பக்கம் வரை)

(தியானம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 5. மங்கள கவுரீ விரத பூஜை »

தீப மந்திரம் அக்டோபர் 31,2018

தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: ... மேலும்
 
நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை ... மேலும்
 

ஸமஸ்த உபசார பூஜை அக்டோபர் 31,2018

ஸமஸ்த உபசார பூஜைரௌப்யேண சாஸனம் திவ்யரத்ன மாணிக்ய சோ ’பிதம்மயாநீதம் க்ருஹாண த்வம் கௌரி கௌமாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar