பதிவு செய்த நாள்
31
அக்
2018
04:10
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்
(நாம் எந்த
ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன்
இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த
ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம்
செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)
மமோபாத்த
ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே
முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே,
வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே,
ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச
’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்
மத்யே,
.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)
தமிழ் வருஷங்கள் 60
1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36 சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய
..... அயனே (உத்தராயணே தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே ஆடி முதல் மார்கழி வரை)
......ருதௌ
ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6
தமிழ் மாதங்கள் ருதுக்கள்
1. சித்திரையும், வைகாசியும் : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது
....... மாஸே
தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ் மாதங்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. சித்திரை 1. மேஷம்
2. வைகாசி 2. ரிஷபம்
3. ஆனி 3. மிதுனம்
4. ஆடி 4. கடகம்
5. ஆவணி 5. சிம்மம்
6. புரட்டாசி 6. கன்னி
7. ஐப்பசி 7. துலாம்
8. கார்த்திகை 8. விருச்’சிகம்
9. மார்கழி 9. தனுஸு
10. தை 10. மகரம்
11. மாசி 11. கும்பம்
12. பங்குனி 12. மீனம்
ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:
அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.
ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.
திதிகள்: 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
..........பக்ஷே
(அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல
பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி
வரையில் க்ருஷ்ண பக்ஷம்).
.......சு’ப்திதௌ
திதிகள் : 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
.........வாஸர யுக்தாயாம்
தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ்நாட்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்
4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்
........நக்ஷத்ர யுக்தாயாம்
நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
நக்ஷத்திர பெயர்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. அஸ்வினி அஸ்வினீ
2. பரணி அபபரணி
3. கார்த்திகை க்ருத்திகா
4. ரோகிணி ரோஹிணி
5. மிருகசீர்ஷம் ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா ஆர்த்ரா
7. புனர்பூசம் புனர்வஸு
8. பூசம் புஷ்ய
9. ஆயில்யம் ஆஸ்லேஷா
10. மகம் மக
11. பூரம் பூர்வ பல்குனி
12. உத்திரம் உத்தர பல்குனி
13. அஸ்தம் ஹஸ்த
சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,
இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.
.....
கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),...
நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’
(பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, ....
(பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)
நாமதேயஸ்ய
அடுத்து என்ன
பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை
செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:
* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.
(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)
திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.
மமோபாத்த,
ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ ’பனே
முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’வேத வராஹ கல்பே, வைவஸ்வத
மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்புத்வீபே, பாரத
வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே அஸ்மிந் வர்த்தமானே,
வ்யாவஹாரிகே, ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ....நாம ஸம்வத்ஸரே,
தக்ஷிணாயனே ச ’ரத் ருதௌ, *.... மாஸே, சுக்லபக்ஷே, பஞ்சம்யாம் சு’பதிதௌ.
மயி
ருதுமத்யாம் ஸத்யாம் மயா ஆசரித தாம்பூலசர்வண, ரஜோனிர்மாண, பரபுருஷ
நிரீக்ஷண, பஹிர் நிர்கமன சண்டாளதர்ச ’ன, பாண்டஸ்பர்ச ’ன. பர்த்ருஸஹச ’யன,
ஸம்போகாதி ஜனித ஸகல ப்ரதிபந்தக நிவ்ருத்யர்த்தம், மம இஹஜன்மனி ஜன்ம
ஜன்மாந்தரேஷு ஸ்த்ரீ ஜன்ம ப்ராதுர்ப்பாவ ஸம்பூத ரஜோதர்ச ’னமாரப்ய
ரஜோநிவ்ருத்தி பர்யந்தம், திவா ராத்ரௌ ஜ்ஞானத: அஜ்ஞானதச்’ச,
ரஜ:ப்ராதுர்பாவே ஸதி அகால ஸ்னான, ரஜஸ்வலா நியம ராஹித்ய, அகால போஜன
பர்யுஷிதான்ன போஜன தர்பண நிரீக்ஷண கடச ’யன குங்குமாதி லேபன பர்த்ரு
ஸம்பாஷணாதி ஜனித பாப நிவ்ருத் யர்த்தம் ப்ரஸூதிகா மத்யே தச ’ம திவஸ
பர்யந்தேஷு ஔஷதஸேவன பலாண்டு லசு ’நபக்ஷண, மலமூத்ராதி ஸேவன சதுர்த்த
பஞ்சமாதி ஸமபாஷணாதி ஜனிததோஷ நிவ்ருத்யர்த்தம், அவஸ்தாத்ரயேஷு மனோவாக்காய
கர்மபிஸ் ஸம்பாவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் அபனோதனார்த்தம், யஜ்ஞாயுத
பலாவாப் த்யர்த்தம், ஸர்வ வ்ரதாசரண ஸர்வதீர்த்த நிஷேவண ஸர்வதான கரண
பலப்ராப்த்யர்த்தம், ப்ரஹ்மலோக நிவாஸ ஸித்யர்த்தம், நிருபத்ரவ
ஸம்பதபிவ்ருத்யர்த்தம், மயா ஆசரிதஸ்ய ரிஷிபஞ்சமீ வ்ரதஸ்ய ஸம்பூர்ண ஸாங்கபல
ஸித்யர்த்தம், கச் ’யபாதி ஸப்தரிஷி ப்ரீத்யர்த்தம், ஸப்தரிஷி ப்ரஸாத
ஸித்யர்த்தம், ப்ரஹ்மாண்ட புராணோக்த ப்ரகாரேண அருந்ததீ ஸஹித கச்’யபாதி
ஸப்தரிஷி பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ புஜாம் ச கரிஷ்யே
(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்.)
பஞ்சாங்கம் பார்க்கவும்
கலச ’ பூஜை கண்டா பூஜை
(பக்கம் 1416ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)
கண்டா பூஜை
(பூஜை
செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும்,
கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு,
மணியடிக்கவும்.
ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்
10. கலச ’ பூஜை
இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.
பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.
கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி
கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி
பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.
ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி
பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
கலச ’ ச்’ லோகம்
கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:
அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)
என்று
ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும்,
ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
ஸமஸ்த உபசார பூஜைகள்
த்யாயேத் ருஷீன் ஸுவர்ணபான் ஜடாவல்கலதாரிண:
ருத்ராக்ஷமாலாபரணான் த்ரிபுண்ட்ராங்கித மஸ்தகான்
க்ருஷ்ணாஜிநே நோத்தரீயான் ஸபவித்ர கராம்புஜான்
தண்டாக்ஷமாலா கரகான் ரிஷீன் பாஸ்கர தேஜஸ:
கச்’யபாதீன் ஸபத்நீகான் ஸர்வபாப நிவாரகான்
அக்னிஹோத்ர ரதான் சா’ந்தான் ஸதா ப்ரஹ்மபராயணான்
கச் ’யபோத்ரிர் பரத்வாஜோ விச்’வாமித்ரோத கௌதம:
ஜமதக்னிர் வஸிஷ்டச்’ச ச்’ரத்தயாவாஹயாம்யஹம்
அஸ்மின் கும்பே அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷீன்
த்யாயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
கச்’யப: ஸர்வலோகானாம் ஸர்வபூதேஷு ஸம்ஸ்த்தித:
நாரணாம் பாபநாசா’ய ரிஷிரூபேண திஷ்ட்டதி
அஸ்மிந் கும்பே கச் ’யபம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
அத்ரயே து நமஸ்துப்யம் ஸர்வபூத ஹிதைஷிணே
தபோரூபாய ஸத்யாய யோகினாம் ஹிதகாரிணே
அஸ்மிந் கும்பே அத்ரிம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
பரத்வாஜ நமஸ்துப்யம் வேதவேதாங்க பாரக
மஹாஜ்வலன ஸங்காச ’ ஸர்வபாபான் தஹஸ்வ மே
அஸ்மிந் கும்பே பரத்வாஜம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
விச்’வாமித்ர நமஸ்துப்யம் ஜ்வலன்முக மஹாயசா’:
அபேராக்ஷித காயத்ரின் தபோருபணே திஷ்ட்டஸி
அஸ்மிந் கும்பே விச்’வாமித்ரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
கௌதமஸ் ஸர்வபூதானாம் ரிஷீணாம் ச ப்ரவர்த்தக:
ச்’ரௌதானாம் கர்மணாம் சைவ ஸர்வேஷாம் ச ப்ரவர்த்தக:
அஸ்மிந் கும்பே கௌதமம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஜமதக்னே மஹா தேஜாஸ் தபஸா ஜ்ஞானலோசன
லோகேஷு தர்மவ்ருத்த்யர்த்தம் தபோரூபேண திஷ்ட்டஸி
அஸ்மிந் கும்பே ஜமதக்னிம் ஆவாஹாயமி
(புஷ்பம்அக்ஷதைகளை போடவும்)
நமஸ்துப்யம் வஸிஷ்ட்டாய ஜடிலாய மஹாத்மனே
தர்மரூபாய ஸத்யாய லோகானாம் ஹிதகாரிணே
அஸ்மிந் கும்பே வஸிஷ்ட்டம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
அருந்ததி நமஸ்துப்யம் மஹாபுண்ய ப்ரவர்த்தினி
பதிவ்ரதானாம் ஸர்வாஸாம் தர்மசீ’ல ப்ரவர்த்தினி
அருந்ததீம் ஆவாஹயாமி அஸ்மின் கும்பே
அருந்ததீஸஹிதான் ஸப்தரிஷீன் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஸுர்வண ரத்ன கசிதான் யாஸநானி வராணி ச
க்ருஹ்ணீத்வம் ரிஷயஸ் ஸர்வே மம பாபாபனுத்தயே
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
ஆஸனானி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஆனீதம் ஸ்வர்ணபத்ரேண திலதூர்வாதி ஸம்யுதம்
ஸ்வீகுருத்வம் மயா தத்தம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)
ஸாக்ஷதம் குச ’ புஷ்பைச் ’ச ஸஹிதம் சீ ’தலம் ஜலம்
க்ருபாளுப்யோ மஹர்ஷிப்ய: அர்க்யம் வ: ப்ரததாம்யஹம்
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
கங்காதி ஸலிலம் சைவ லவங்காத்யை: ஸுவாஸிதம்
தத்தம் மயா ஆசமனம் குருத்வம் ரிஷிஸத்தமா:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
ஹேமபாத்ர ஸ்த்திதம் சீ ’தம் ததிமத்வாஜ்ய ஸம்யுதம்
ஸமர்ப்பிதம் முனிச் ’ரேஷ்ட்டா: மதுபர்க்கம் மயாதராத்
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)
பயோ ததி க்ருத க்ஷௌத்ர ச ’ர்க்கரா பல ஸம்யுதம்
ஸ்னானார்த்தம் வ: ப்ரதாஸ்யாமி பஞ்சாம்ருதமஹம் முதா
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
பஞ்சாம்ருதஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருத அபிஷேகம் செய்யவும்)
ஹேமகும்பை: ஸமானீதம் கங்காதி ஸலிலம் சு’பம்
ஸ்னானார்த்தம் ஸ்வீகுரு த்வம் மே ஸர்வாகௌக
நிவ்ருத்தயே அருந்ததீஸஹித கச்’யபாதி
ஸப்தரிஷிப்யோ நம: சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)
ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
க்ஷௌமாண்யமூல்ய வஸ்த்ராணி ஆனிதானி மஹர்ஷய:
க்ருஹ்ணீத்வம் ப்ரீதிபாவேன பஸ்மோத்தூளிதவிக்ரஹா:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
வஸ்த்ராணி ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)
உபவீதாதி கார்ப்பாஸ நிர்மிதானி சு’பானி ச
ஸமர்ப்பிதானி க்ருஹ்ணீத்வம் மாமுத்தர்த்தும் முனீச் ’வரா:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
உபவீதானி ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)
கர்ப்பூராகரு கஸ்தூரீ குங்குமாதி ஸமன்விதம்
சந்தனம் வ: ப்ரதாஸ்யாமி கச்’யபாத்யா மஹர்ஷய:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
கந்தான் தாரயாமி (சந்தனமிடவும்)
அக்ஷதான் தவளான் சு’ப்ரான் சா’லீயான் தண்டுலான் சு’பான்
அர்ப்பயாமி முனிச்’ரேஷ்ட்டா: ஸர்வாபீஷ்ட ப்ரதாயகா:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
கந்தோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்)
கிரீட ஹார மகுட கேயூராம்ச் ’ சாங்குளீ யகம்
ததாம்யாபரணான்யத்ய த்ருத்வா ரக்ஷந்து மாம் ஸதா
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணம் அணிவிக்கவும்)
கமலோத்பல கல்ஹார கேதகீ ச ’ தபத்ரகான்
புஷ்பாணி ப்ரதிக்ருஹ்ணீத்வம் ருஷயோ தீப்ததேஜஸ:
அருந்ததீஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பம் அல்லது மாலை போடவும்.)