பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
சென்னை: மனிதன் மீது,மனிதத்தை காட்டுவது தான் ஆன்மிகம், என, ஆண்டாள் பிரிய தர்ஷினி பேசினார்.ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி, தினமலர் - தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்ட, மனசில் பட்டதை மற்றும் ழகரம் பதிப்பகம் வெளியிட்ட, கண்ணதாசன் என்னும் கடல் ஆகிய புத்தகங்கள், மயிலாப்பூர், மியூசிக் அகாடமியில், நேற்று முன்தினம் (நவம்., 3ல்) வெளியிடப்பட்டது.முனைவர் அவ்வை நடராசன், நூல்களை வெளியிட்டு பேசுகையில், ஆண்டாள் பிரியதர்ஷினி, 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.தினமலர் நாளிதழ், தன் கருத்துகளை தெளிவாகவும், அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும், என்றார்.இதில், மனசில் பட்டதை புத்தகத்தின்முதல் பிரதியை,பத்திரிகைத் தகவல்அலுவலகத்தின், தென்மண்டலத் துணைத் தலைமை இயக்குனர், மாரியப்பன் பெற்றுக் கொண்டார்.முன்னதாக, நிகழ்ச்சியில், ழகரம் பதிப்பகத்தின், லோகோ வெளியிடப்பட்டது. இதில், சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது பெற்ற, கவிஞர் மனுஷி பங்கேற்றார்.கண்ணதாசன் பதிப்பக தலைவர், காந்தி கண்ணதாசன் பேசுகையில், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பின், வாசிப்பு குறைந்து விட்டது. புத்தகத்தை வாங்கி படிப்பதுடன், மற்றவர்களை படிக்க வையுங் கள், என்றார்.ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது:மனிதன் மீது, மனிதத்தை காட்டுவது தான் ஆன்மிகம். இதுவே, மனசில் பட்டதை நூலின் காரணம். கண்ணதாசன் காலத்து பாடல் கள், அறம் சார்ந்து, நல்ல கருத்துகளை வெளிபடுத்தின. தற்போது உள்ள பாடல்கள், அதுபோல் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.அமுதசுரபி மாத இதழ் ஆசிரியர், திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:தன் இளமை காலத்தில், பொதுவுடமை, நாத்திகம் சார்ந்த கருத்துகளை கொண்டோர், பின்நாளில், ஆன்மிகவாதிகளாக மாறி விடுகின்றனர். கண்ண தாசனே, அதற்கு உதாரணம்.அனைத்து மதத்தினரும் நட்புறவுடன் வாழ்ந்தால் தான், தமிழகம் தழைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.