Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளகோவில் வீரக்குமாரசாமிக்கு ... சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

08 நவ
2018
03:11

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

இரவு 11.30 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளதாளம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும், கூடியிருந்த பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை அமாவாசை நோம்பு இருந்த போதும் வழக்கம் போல் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உட்பட 400 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், கடலுார், புதுச்சேரி உட்பட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar