கந்தசஷ்டி விழா துவக்கம்: விரதம் துவக்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2018 11:11
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் சுவாமிகளுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. இதையடுத்து பக்தர்களும் காப்புக்கட்டி சஷ்டி விரதம் துவங்கியுள்ளனர்.
பழநி முருகன் கோயிலில் நவ.,8 முதல் 14 வரை கந்த சஷ்டிவிழா நடக்கிறது. விழாவின் முதல்நாளான நேற்று மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர், உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்புக்கட்டினர். அதன்பின் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகரை வழிப்பட்டு பக்தர்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். இரவு தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான நவ.,13ல் சூரசம்ஹாரமும், நவ.,14ல் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் (பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.