பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2018 02:11
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் (நவம்., 8ல்) கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.
6ம் திருநாளான நவ. 13 மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ. 14ல் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து விருந்தும் நடக்கிறது. ஏற்பாடு களை செயல்அலுவலர் அண்ணாதுரை, திருப்பணிக்குழுவினர்கள் எல். சசிதரன், பி.சி. சி தம்பரசூரியவேலு மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
அர்ச்சகர் கார்த்திக் கூறுகையில்: கோயிலில் சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர் வருகை அதிகரித்துள்ளது. பெரியகுளம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கந்த சஷ்டிவிரதம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் காலை, மாலையில் கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர், என்றனர்.