பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
போடி: இயற்கை எழில் கொஞ்சம் தென்காசியம்பதி என போற்றப்படும் போடியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயில் 265 ஆண்டுகளுக்கு முன் போடி ஜமீன் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில், திம்மி நாயக்கர் காலத்தில் பழநி முருகன் மலைக் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து கோயில் கட்டி வணங்கினர்.
அதன் பின் ஜமீன்தார் டி.பி. எஸ்.எஸ். ராஜ பாண்டிய நாயக்கர் காலத்தில் 1956ல் பெரிய கோயிலாக கட்டி பொதுமக்களுக்கான நன்கொடையாக வழங்கப்பட்டது.
இங்கு 51 அடி உயர ராஜகோபுரத்துடன் 5 நிலைகளையும் கொண்டு கிழக்கு நோக்கியும், அம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை யுடன் அமைந்துள்ளது. சிறப்பம்சம், மனமுருகி வணங்குபவர்களுக்கு வேண்டிய வரமும், திருமணம், கல்வி, தொழில் அபிவிருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். கோயில் உள் வளாக த்தில் தெற்கு நோக்கி நடராஜரும், தட்சணாமூர்த்தியும் உள்ளனர்.
எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீதேவி, பூதேவி, சமே சீனிவாசப் பெருமாள் கன்னி மூலையில் உள்ளார். எதிரே அனுமனும் அருகே காசி விஸ்வநாதராக சிவனும், வாயு மூலையில் சரஸ்வதி, லட்சுமியும், வடக்கு நோக்கி துர்கா தேவி, சண்டிகேஸ்வரரும், ஈசான பகுதியில் நவக்கிரகமும், பைரவரும் அமைந்து அருள் பாலிக்கின்றனர். சனி பகவானுக்கு தனி
சன்னதி உள்ளது. தற்போது கந்தசஷ்டி நடக்கிறது. அதுபோல மாதாந்திர வழக்கமான
பூஜைகள், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 5:00 முதல் 9:00 மணி வரை திறந்திருக்கும். தக்காராக அண்ணாதுரையும், அர்ச்சகராக விக்னேஸ்வர குருக்களும் உள்ளனர். மேல்விபரவங்களுக்கு 0456 280777