Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வாகன யோகம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1, 2) குருவால் சுபநிகழ்ச்சி ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2018
12:51

நீங்கள் கடந்த மாதத்தை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும். காரணம் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான புதன் டிச.8ல் வக்கிர நிவர்த்தி  அடைந்து சாதகமான இடத்துக்கு மாறுகிறார்.  உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். இதனால்  பொருளாதார வளம் சிறக்கும். நகை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

வெளியில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் வீட்டில் நிம்மதி பெருமூச்சு விடலாம். கடந்த மாதம் குடும்பத்தில் எண்ணற்ற பல பிரச்னை நிகழ்ந்திருக்கலாம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டு இருக்கக் கூடும். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. இந்த மாதம் டிச.8 முதல் 8ம் இடத்திற்கு செல்வதால் இந்த பிரச்னை மறைந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும். தம்பதியர் ஒன்றுபடுவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபடுவது கண்டு பெருமை கொள்வீர்கள். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. நவ. 21,22ல் பெண்கள் மூலம் பண உதவிகள் கிடைக்கும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.17, டிச.13,14,15ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.27,28ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சுக்கிரன் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் சக பெண் ஊழியர்களிடம் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். டிச.7க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  டிச.11,12 சிறப்பான நாட்களாக அமையும்.     

வியாபாரிகள் சீரான வருமானத்தைக் காணலாம். அரசு வகையில்  சலுகை எதிர்பார்க்க வேண்டாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். டிச.2,3ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நவ.18,19,20,23,24ல் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். சனி பகவானால் எதிரிகளின் இடையூறு தலைதுாக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர் பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆடம்பர வசதிகள் பெருகும். நவ. 29,30, டிச.1ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம். டிச.7க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு  கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை சாகுபடி மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை, நிதானம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் டிச.7 க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். நவ.25,26ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.

* நல்ல நாள்: நவ.17, 21, 22, 25, 26, டிச.2, 3, 4, 5, 11, 12, 13, 14, 15
* கவன நாள்: டிசம்பர் 6, 7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 7
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு  தீபம்
● தினமும் காலையில் சூரிய வழிபாடு
● வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.