Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) பயணத்தால் வெற்றி மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1, 2) குருவால் சுபநிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1, 2) குருவால் சுபநிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

12 நவ
2018
12:11

இந்த மாதம் புதன் டிச. 8 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பிறகு அவர் சாதகமாக காணப்படவில்லை. ரிஷப ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் இருக்கிறார். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் 6-ம் இடத்தில் இருக்க இந்த மாதம் மலர்கிறது. மனதில் சோர்வு ஏற்படும்.  சூரியனால் சாதகமான பலன் உண்டாகாது.  குரு,ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர்.

ராகுவால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியையும் தந்து கொண்டிருக்கிறார். குருபகவானால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

குடும்பத்தில் புதனால் எடுத்த காரியம் வெற்றியடையும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். டிச.7க்கு பிறகு குடும்பத்தில் சிற்சில பிரச்னை ஏற்படலாம்.  கணவன்-, மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. மனக்குழப்பம் உருவாகலாம். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே.

நவ.18,19,20ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் நவ. 29,30, டிச.1 ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.23,24ல் பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர்.பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.


சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.   தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை  டிச.8 க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.  அதன் பிறகு வேலைப்பளு அதிகம் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். நவ.17, டிச.13,14,15 ல் சிறப்பான பலன்களை காணலாம்.

வியாபாரிகள் ராகுவால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலம் தரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். சூரியனால் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அலைச்சல், பகைவர் தொல்லைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். டிச.4,5ல் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நவ.21,22,25,26ல் பணவிரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். கலைஞர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தேவையற்ற ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய புகழ் தட்டிப் பறிக்கப்படலாம்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று  விடாமுயற்சியால் வெற்றி காண்பர்.  புதன் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைவதால் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் ஆலோனையை பின்பற்றினால்  முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடைச்செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். அவர்களால் குடும்பவாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். நவ. 27,28ல் உற்சாகமாக காணப்படுவீர்கள். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். டிச.6,7ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் உதவி கிடைக்கும். டிச7க்கு பிறகு எதிலும் சற்று பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

செவ்வாயால் உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். தாயின் உடல்நலனில் அக்கறை தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.

* நல்ல நாள்: நவ.17, 18, 19, 20, 23, 24, 27, 28, டிச.4, 5, 6, 7, 13, 14, 15
* கவன நாள்: டிச.8, 9, 10 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1, 5
* நிறம்: மஞ்சள், நீலம்

* பரிகாரம்:
● சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar