முருகனின் படைத்தளபதியாக வீரபாகுவும், அவருக்கு துணையாக வீரமகேந்திரர் என்பவரும் விளங்கினர். சூரசம்ஹாரத்தில் இவர்களின் சேவையைப் பாராட்டி, திருச்செந்தூரில் கருவறையின் முன்புள்ள மண்டபத்தில் வீற்றிருக்க அனுமதியளித்தார் முருகன். தற்போதும் திருச்செந்தூரில் வீரபாகுவுக்கு பூஜை செய்த பின்னரே, முருகனுக்கு பூஜை நடப்பது மரபாக உள்ளது. வீரபாகுவுக்கு பிடித்த உணவு பிட்டு. அரிசி பிட்டு சத்தான உணவு என்பதோடு எளிதில் ஜீரணமாகும். பிட்டை வீரபாகுவுக்கு நைவேத்யம் செய்ய நம் விருப்பம் விரைவில் நிறைவேறும். திருப்பரங்குன்றத்திலுள்ள நவவீரர்கள் சன்னதியிலும் வீரபாகு அருள்பாலிக்கிறார்.