வில்லியனூர்:சுந்தரமூர்த்தி விநாயகபுரம் (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள சிவசுப்ரமணிய கோவிலில், 36 முறை சஷ்டி கவச பாராயணம் இன்று (நவம்., 13ல்) நடைபெறுகிறது.வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் (மேற்கு) வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய கோவிலில் இன்று (13ம் தேதி) கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 36 முறை சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு கலசாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு மகா தீபாரா தனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்ரமணியன் செய்துள்ளார்.