சிறுமுகை:விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறுமுகையில், சத்தி மெயின் ரோட்டில் சக்தி விநாயகர் கோவிலும், மகா சக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளன. கும்பாபிஷேக விழா, கடந்த, 11ல் பிள்ளையார் வழிப்பாட்டுடன் துவங்கியது. பிள்ளையார் பீடம் பொன் மணிவாசக அடிகள் கோபுர கலசங்களுக்கும், மூலத்துறை ஜெயப் பிரகாஷ் கருவறைகளில் உள்ள சுவாமிகளுக்கும் புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ., சின்னராஜ், திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, தலைவர் சங்கரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.