திருப்போரூர் வைகுண்ட பெருமாள் பெருமாள் கோவில் கோபுரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2018 02:11
திருப்போரூர்:வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ளது, வைகுண்ட பெருமாள் கோவில்.அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோவில் வளாகத்தில், முட்செடிகள் வளர்ந்து, மண்டிக் கிடக்கின்றன. கோபுரத்தின் மீது செடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்படும் நிலை உள்ளது.எனவே, அறநிலையத் துறையினர் இக்கோவிலில் முறையான பராமரிப்புப் பணியை மேற்கொள்ள, கோரிக்கை எழுந்துள்ளது.