பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
மொடக்குறிச்சி: கோவை மாவட்டம் இந்து முன்னனி சார்பில் லட்சம் குடும்பங்கள் பங்கு கேற்கும், மகாலட்சுமி மகாயாகம் மற்றும் 1008 கோமாதா பூஜை, டிச., 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. தவிர, மகாயாக தினத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம், 108 அஸ்வ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடக்க உள்ளது. இதையொட்டி, மகாலட்சுமி ரதம், நேற்று முன்தினம் பாசூரில் தொடங்கி, கருமாண்டம் பாளையம், எழமாத்தூர், மொடக்குறிச்சி, விளக்கேத்தி வழியாக ஊர்வலம் வந்தது. மீண்டும் நேற்று, வடுகப்பட்டி மற்றும் அரச்சலூரில், ரத ஊர்வலம் வந்தது. மக்கள் ரதத்தில் கொண்டு வரப்பட்ட மகாலட்சுமியை தரிசித்து சென்றனர். நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் விவேக், துணைத்தலைவர் சங்கர், பொது செயலாளர் கவுரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.