பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், கார்த்திகை 1ம் தேதி முதல், தை மாதம் மகர ஜோதி வரை, ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, கூடுதுறையில் குளிக்கும் வசதி, கழிப்பறை வசதிகளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பவானி போலீசார், தற்காலிக ஸ்டேஷன் துவங்கி, தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நடப்பாண்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, திருட்டு சம்பவங்களை தடுக்க, முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.