பதிவு செய்த நாள்
17
நவ
2018
03:11
பழநி: பழநி முருகன் கோயிலில் காப்புகட்டுதலுடன் கார்த்திகை தீபதிருவிழா இன்று (நவம்., 17ல்) துவங்குகிறது.
கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் இன்று (நவம்., 17ல்) மாலை சாயரட்சை பூஜையில் மூலவர் முருகர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகார்ச்சனை நடக்கிறது.
தங்கரதம் நிறுத்தம்: நவ., 23ல் பெரிய கார்த்திகையை முன்னிட்டு, அன்று மாலை 6:00 மணிக்கு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிகிறார். மலைக்கோயில் நான்கு பக்கங்களிலும் தீபங்கள் மற்றும் மேற்கு தீபக்கம்பத்தில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இதனால் அன்று இரவு தங்கரதப்புறப்பாடு கிடையாது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.