ராமநாடக கீர்த்தனம் என்னும் பெயரில் பாடல் தொகுப்பை எழுதியவர் அருணாச்சலக் கவிராயர். கன்னிமாடத்தில் இருந்து ராமனைக் கண்ட சீதை பாடுவது போல், இவர் எழுதிய, யார் இவர் யாரோ? என்ன பேரோ? என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. பைரவி ராகத்தில் அமைந்த இந்தப்பாடல், இடம்பெறாத கச்சேரியே அந்தக்காலத்தில் இல்லை. ராமாயணம் நாடகம் எங்காவது நடந்தால், அதன் முடிவில் இவர் பாடிய ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம். நல்ல திவ்ய முகச்சந்திரனுக்கு சுபமங்களம், என்னும் பாடலை பாடி முடிப்பர்.