பதிவு செய்த நாள்
23
நவ
2018
03:11
ப.வேலூர்: ப.வேலூர், அய்யப்ப சுவாமி கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை, சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. ப.வேலூர், அய்யப்ப சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாத பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (நவம்., 22ல்) காலை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, பிரசாதம் வழங்கப் பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல், அய்யப்ப சுவாமி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் பவுர்ணமி பூஜை குழுவினர், பால்குட அபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.