பதிவு செய்த நாள்
23
நவ
2018
03:11
உத்திரமேரூர் : மானாம்பதியில், 26 லட்சம் ரூபாய் செலவில், சோழியம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், சோழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 5 ஏக்கர் குளம், கடந்த ஆண்டுகளில் முறையாக பராமரிப்பு இல்லாமல், தூர்ந்து, சீரழிந்து வந்தது. இக்குளத்தை சீரமைக்க, பக்தர்கள், தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அறநிலையத் துறை ஆணையர், பொது நிதியில் இருந்து, 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.குளத்தை தூர் வாரி, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி வருகின்றனர்.