கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர், சக்திவேல் முருகன் கோவில்களில் கிருத்திகை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 04:11
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர், சக்திவேல் முருகன் கோவில்களில் கிருத்திகை உற்சவம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கிருத்திகையையொட்டி, நேற்று (நவம்., 23ல்) காலை 8:00 மணி முதல் ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு தீபாரதனைகள் நடைபெற்றன.வெற்றிவேல் குன்றம் சக்திவேல் முருகன் கோவிலில் 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.