பதிவு செய்த நாள்
24
நவ
2018
04:11
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் அமைந்துள்ள முக்தியாஜல ஈஸ்வரருக்கு, கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 23ல்) மாலை பெருமுக்கல் மலையில் தீபம் ஏற்றப்பட்டது.அதனையொட்டி, நேற்று (நவம்., 23ல்) பிற்பகல், முருங்கப்பாக்கத்தில் இருந்து 1008 லிட்டர் கொள்ளவு கொண்ட நெய் தீப கொப்பரை, வாகனத்தின் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்களின் தரிசனத்திற்காக ஊர்வலமாக பெருமுக்கல் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.கண்டாச்சிபுரம்:
ஒட்டம்பட்டு மலையில், ஒட்டம்பட்டு அருணாபுரம் பொதுமக்கள் சார்பில், நேற்று (நவம்., 23ல்) மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக தீப கொப்பரைக்கு தீபம் நடை பெற்றது. இதில் தர்மகர்த்தா அண்ணாதுரை, ராமன், காண்டீபன், தங்கவேல், பாலசுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* அவலூர்பேட்டை:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலையில் உற்சவ அம்மன் கோவில் வளாகத்திற்கு வெளியே தென் மேற்கு மூலையில் கொண்டு வந்து அமர்த்தப்பட்டது. பின்னர் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அங்கு உற்சவ அம்மனுக்கு தீபாரதனையை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் லட்ச தீபம் ஏற்பட்டது.