பதிவு செய்த நாள்
24
நவ
2018
04:11
விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத
கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 22ல்)மாலை 6.00 மணிக்கு விநாயகர், மூலவர், அம்மன், முருகர் சுவாமி சன்னதி கோபுரங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டது.
பின், மூலவர் கோபுர சன்னதியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, உற்சவர் ரிஷப வாகனத்தில் கோவிலின் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். கோவிலின் கோபுரத்திற்கு
முன்பு, சொக்கப்பனை ஏற்றும் இடத்தில் அகல்விளக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ததையடுத்து, உற்சவருக்கு மகா தீபாராதனை ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.