விழுப்புரம்: விழுப்புரம் நாப்பாளைய தெருவில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் 144ம் ஆண்டு பெருவிழா துவங்கியது.விழாவை யொட்டி, நேற்று மாலை 6.00 மணிக்கு தேவாலய பெருவிழா கொடியேந்தி, கிறிஸ்துவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பின், புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தை வந்தடைந்தனர். அங்கு, வில்லியனுார் புனித லுார்து அன்னை திருத்தலம் அதிபர் பிச்சைமுத்து கொடியேற்றினார்.நிகழ்ச்சியில், பங்கு தந்தை ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவி பங்குதந்தை ஜீவா உட்பட கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று (26ம் தேதி) முதல் தினந்தோறும் மாலை 6.00 மணிக்கு தேர்பவனி நிகழ்ச்சியும், வரும் 3ம் தேதி ஆடம்பர கூட்டு திருப்பலியும், 4ம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.