பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
சாலவாக்கம்: எடமச்சி மலை மீது, கார்த்திகை தீப விழா, மூன்று நாட்கள் நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் உள்ள, 1,370 அடி உயர மலை மீது, உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு, 138ம் ஆண்டு, கார்த்திகை தீப விழா, மூன்று நாட்களாக நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள காமாட்சி அம்பாள் உடனுறை முத்தீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர் மற்றும் அம்மன் கோவில்களில், அகல் விளக்குகள் ஏற்றி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து மேள வாத்தி யம் முழங்க, பக்தர்கள் மலைக்கு சென்று, அண்ணா மலையாருக்கு தீபம் ஏற்றி, பூஜைகள் செய்தனர்.