பதிவு செய்த நாள்
27
நவ
2018
11:11
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள, முனியப்பன் கோவில்களில், ஆண்டு பழம் படைத்தல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஐயனாரப்பன், பெரிய முனியப்பன் கோவில், திருச்செங்கோடு சாலையில் உள்ள சடை முனியப்பன் கோவில், ராசிபுரம் சாலையில் உள்ள ஏரிக்கரை முனியப்பன் கோவில் மற்றும் சேலம் சாலையில் உள்ள முனியப்பன் கோவில்களில் கார்த்திகை மாத திங்கள் கிழமையான நேற்று, பழம் படைத்தல் விழா நடந்தது. சேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டணம், மல்லசமுத்திரம், நைனாம்பட்டி, பிச்சம்பாளையம், ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள முனியப்பன் சுவாமியை, குலதெய்வமாக கொண்ட பங்காளிகள் குடும்பத்தினர், நேற்று காலை குடும்பத்தினருடன் கோவில்களுக்கு வந்து சுவாமியை சுத்தம் செய்து, மாலைகள் அணிவித்தனர். பின், தேங்காய் பழங்களை படைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பழம் படைத்தல் விழாவும், வைகாசி மாதத்தில் பொங்கல் விழாவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தெவம் திருவிழாவும் நடத்தப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.