பதிவு செய்த நாள்
28
நவ
2018
12:11
கோவை: ஐதராபாத் - கொல்லம் இடையே கோவை வழியாக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு, இன்று (நவம்., 28ல்) காலை, 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
ஐதராபாத்தில் இருந்து டிச., 11,15,19,24ம் தேதிகளிலும், அடுத்தாண்டு ஜன., 3, 6, 10, 13 தேதி களிலும் மதியம், 3:55 மணிக்கு புறப்படும் ரயில்(வ.எண்: 07109), மறுநாள் இரவு, 11:55 மணிக்கு கொல்லம் செல்கிறது.கொல்லத்தில் இருந்து டிச., 15,24,26 மற்றும் அடுத்தாண்டு ஜன., 5, 8, 12,15ம் தேதிகளிலும் காலை, 3:00 மணிக்கு புறப்படும் ரயில்(வ.எண்:07110 ), மறுநாள் காலை, 10:30க்கு ஐதராபாத் செல்கிறது.
அதேபோல், ஐதராபாத்தில் இருந்து டிச., 12, 16ம் தேதிகளிலும், அடுத்தாண்டு ஜன., 2, 5, 8, 9, 12, 14ம் தேதிகளிலும் மாலை, 4:15 மணிக்கு புறப்படும் ரயில்(வ.எண்:07141) மறுநாள் இரவு, 11:55 மணிக்கு கொல்லம் செல்கிறது.கொல்லத்தில் இருந்து டிச., 14, 18ம் தேதிகளிலும், அடுத் தாண்டு ஜன., 4, 7, 10, 11, 14, 16ம் தேதிகளிலும், காலை, 3:00க்கு புறப்படும் ரயில்(வ.எண்:07142) மறுநாள் காலை, 10:35க்கு ஐதராபாத் செல்கிறது. இதற்கான முன்பதிவுகள், இன்று (நவம்., 28ல்) துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.