சங்ககிரி: சங்ககிரி, பால்வாய் கொய்யா மரத்துக்காட்டிலுள்ள, முத்து கருப்புசாமி, அய்யனார ப்பன், முத்து முனீஸ்வரர், காளியம்மன், கன்னிமார் சுவாமிகளின் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (நவம்., 27ல்) நடந்தது. காலை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.