பதிவு செய்த நாள்
28
நவ
2018
01:11
நாமக்கல்: நாமக்கல்லில், சத்யசாயிபாபாவின், 93வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நாமக்கல், சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்யசாயிபாபா, 93வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, கடந்த, 21ல், 108 காயத்ரி மந்திரம், 22ல், 1,008 சஹஸ்ரநாம அர்ச்சனை; 23ல் மாருதிநகர் விநாயகர் கோவிலில் ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம், மாலை சிறப்பு பஜனை, மங்கள ஆரத்தி நடந்தது. மறுநாள், அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாராயண சேவை, சாயி பஜனை மற்றும் மகாமங்கள ஆரத்தி நடந்தது. ஏற்பாடுகளை நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.